மத்திய புலனாய்வு அமைப்பு இந்தியாவில் சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் 76 இடங்களில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் சைபர் நிதி மோசடிகளை ஒடுக்கும் முயற்சியாகச் சிபிஐ அமைப்பு ஆப்ரேஷன் சக்ரா-2' என்ற பெயரில் நாடு தழுவிய நடவடிக்கையை எடுத்தது.
இந்தச் சோதனையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2 கிரிப்டோ மோசடிகள், கால் சென்டர் மோசடிகள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 76 இடங்களில் செய்யப்பட்ட தேடுதல் வேட்டையில் சிபிஐ 32 மொபைல் போன், 48 லேப்டாப், 2 சர்வர், 33 சிம் கார்டுகள், பென்டிரைவ் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதோடு பல வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

ஆப்ரேஷன் சக்ரா-2 சோதனை : ஆப்ரேஷன் சக்ரா-2 இன் கீழ் இந்தியா முழுவதும் 76 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். இந்த ஆய்வுகளுக்குப் பின்பு 100 கோடி ரூபாய் கிரிப்டோ மோசடி உட்படச் சைபர் நிதி மோசடி தொடர்பான ஐந்து தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்யப்பட்டது.
சோதனை எங்கே நடந்தது : ஆப்ரேஷன் சக்ரா-2 கீழ் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டது.
உலகளாவிய செயல்பாடுகள் : இந்த மாபெரும் மோசடியை ஆய்வு செய்ய அமெரிக்காவின் எஃப்.பி.ஐ, இன்டர்போல், இங்கிலாந்தில் உள்ள தேசிய குற்றவியல் அமைப்பு, சிங்கப்பூர் போலீஸ் படை மற்றும் ஜெர்மனியின் பி.கே.ஏ ஆகியவற்றுடன் சிபிஐ நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் : அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றின் புகாரின் பேரில் இரண்டு வழக்குகள் கூடுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது. அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் கொடுத்த புகாரில் தனது நிறுவன பெயரில் கால் சென்டர்களை நடத்தி வெளிநாட்டு இருக்கம் மக்களிடம் நிதி மோசடி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல் கிரிப்டோ மோசடி : ஆப்ரேஷன் சக்ரா-2 திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.100 கோடி ஊழல் பற்றிச் சிபிஐ விளக்கியுள்ளது. இந்த மோசடி திட்டம் மிகவும் துணிச்சலாக மோசடியாளர்கள் நடத்தியுள்ளனர். கிரிப்டோ மைனிங் என்ற போர்வையில் எளிய மக்களிடம் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை காட்டி போலி முதலீட்டுத் திட்டத்தை நடத்தியதன் மூலம் 100 கோடி ரூபாய் அளவில் பணம் திருடப்பட்டு உள்ளது.
இரண்டாவது கிரிப்டோ மோசடி : ஆப்ரேஷன் சக்ரா-2 திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள மற்றொரு வழக்கில், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மண்டி மாவட்டத்தில் போலி கிரிப்டோகரன்சி மோசடி வலையில் சிக்கினர். இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் இதில் பணத்தை இழந்துள்ளனர்.
இந்த மோசடியாளர்கள் முதலீட்டாளர்களைப் பெற, மோசடி செய்பவர்கள் இரண்டு கிரிப்டோகரன்ஸிகளை அறிமுகப்படுத்தினர் இதில் ஒன்று Korvio Coin (KRO) மற்றொன்று DGT Coin. மேலும் இந்த டிஜிட்டல் கரன்சி மீது அதிக முதலீட்டை ஈர்க்க நாணயங்களின் விலையைப் போலியாக உயர்த்தி முதலீட்டாளர்கள் மனதில் ஆசை வளர்த்துள்ளனர்.
இந்த மோசடி திட்டம் எப்படி இயங்கியது? : ஹிமாச்சலப் பிரதேச மோசடியில் ஏராளமான அரசு ஊழியர்களை மோசடி கும்பல் சிக்க வைத்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை அதிகாரிகள். ஆரம்பத்தில், பெரும்பாலான முதலீட்டு மோசடி வழக்குகளைப் போலவே, பல பாதிக்கப்பட்டவர்கள் பெரும் லாபம் ஈட்டினார்கள்.
அதன் மூலம் அவர்கள் வருமானத்தை மேலும் அதிகரிக்கப் பணத்தை முதலீடு செய்யத் தூண்டப்பட்டு high and dry கட்டத்தில் மோசடியாளர்கள் தங்களுடைய கைவரிசையைக் காட்ட துவங்கினர். மேலும் முதலீட்டாளர்கள் முதலீட்டை ஈர்ப்பதில் ஈடுபட்டால் கமிஷன் அளிக்கப்படும் எனத் திட்டத்தின் மூலம் மாபெரும் MLM திட்டமாக இயங்கியுள்ளது.
அரசு அதிகாரிகள் ப்ரோமோட்டர்களாக மாறினர் : 2018 இல் தொடங்கியதாகக் கூறப்படும் ஹிமாச்சல பிரதேச கிரிப்டோகரன்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ள பல காவலர்கள், விருப்ப ஓய்வை அறிவித்துவிட்டு கிரிப்டோ திட்டத்தின் ப்ரோமோட்டராக மாறினர். இறுதியில், முதலீட்டாளர்கள் பல கோடி ரூபாய் ஏமாற்றம் அடைந்தனர். இந்த மோசடியில் சிலர் கைது செய்யப்பட்டதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications