தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களை தொழிற்துறை தேவைகளுக்கு ஏற்ப தயார்ப்படுத்துவதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (Machine Learning), பிளாக்செயின் தொழில்நுட்பம் (Blockchain) போன்ற துறைகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (TNSDC) ஆரக்கிள் நிறுவனம் புதிய கூட்டணியை அமைத்துள்ளது.
TNSDC: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) என்பது தமிழ்நாடு அரசின் தொழில்துறையின் கீழ் இயங்கும் தனி அமைப்பாகும். மாநிலத்தின் இளைஞர்களுக்கு தொழில் திறன்களை வளர்த்து, புதிதாக உருவாக்கும் வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களுக்கான திறனை புகுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.

\தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தி, தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் திறன்களை வளர்த்து மாநிலத்தை திறன் மையமாக மாற்றும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.
2013 முதல், சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் தனி அமைப்பாக இயங்கி வருகிறது. TNSDC, திறன் மேம்பாட்டுக்கான மாநிலத்தின் நோடல் ஏஜென்சியாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
திறன் தேவை மதிப்பீடு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் பல்வேறு துறைகளில் திறன் தேவையை மதிப்பீடு செய்து, தொழிற்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குகிறது.
பயிற்சி வழங்குநர்களின் அங்கீகாரம்: தரமான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை அங்கீகரித்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்.
பயிற்சி திட்டங்கள்: மாநிலம் முழுவதும் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களை வழங்குகிறது. இவை குறுகிய கால திறன் மேம்பாட்டு திட்டங்கள் முதல் நீண்ட கால பட்டயப் படிப்புகள் வரை இருக்கும், இந்த பயிற்சி பல தரப்பு மக்களுக்கு பெரிய அளவில் உதவுகிறது.
வேலைவாய்ப்பு இணைப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவுகிறது.
நான் முதல்வன் திட்டம் பற்றி: "நான் முதல்வன்" என்பது தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு புதிய முயற்சி ஆகும். மாநிலத்தின் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கம்.
இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்கள் முதல் பணிபுரிபவர்கள் வரை பல்வேறு பிரிவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது ஆரக்கிள் நிறுவனத்துடனான கூட்டணியும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தான் செயல்பட உள்ளது.
இந்த கூட்டணியின் மூலம், ஆரக்கிள் நிறுவனத்தின் உலகளாவிய தரம் வாய்ந்த பயிற்சி திட்டங்கள் மாநிலத்தின் இளைஞர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்ற வளரும் தொழில்நுட்ப துறைகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் திறன்களைப் பெற்று, சர்வதேச வேலைவாய்ப்புகளுக்கு தகுதி பெற முடியும்.


Click it and Unblock the Notifications