அட்சய திருதியை பண்டிகை நாளில் தங்கம் விலை தடாலடியாக 900 ரூபாய் உயர்ந்திருப்பது மிகவும் வருத்தமான விஷயமாக இருந்தாலும், இந்த நாளில் ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும்.
இதனால் நாடு முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் இன்று அலைமோதுகிறது, இந்த கூட்டத்தில் சென்று தங்கம் வாங்க விருப்பம் இல்லாத இளம் தலைமுறையினருக்காகவே ஆன்லைன் சேவை மூலம் தங்கத்தை ஹோம் டெலிவரி செய்யும் சேவையை நாட்டின் முன்னணி குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளது.

அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்குவது என்ற பாரம்பரிய நடைமுறை இப்போது வேகமாக மாறி வருகிறது. பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக் பாஸ்கெட் மற்றும் ஜெப்டோ போன்ற Quick Commerce தளங்கள் 10 நிமிடங்களுக்குள் நாட்டில் பல இடங்களில் தங்கம் மற்றும் வெள்ளி டெலிவரி செய்வதாக உறுதியளிக்கின்றன.
பிளிங்கிட் (Blinkit): சோமேட்டோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிளிங்கிட் நிறுவனம் தங்கத்தை மட்டும் விரைவாக டெலிவரி செய்கிறது. இது மட்டும் அல்லாமல் அக்ஷய திருதியை பண்டிகை நாளில் இந்த பூஜை-க்கு தேவையான அனைத்தையும் வழங்குகிறது.
இதில் பூஜை பொருட்கள், தெய்வங்களின் படங்கள் மற்றும் மலர்கள் என அனைத்தும் 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart):
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம், மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் மற்றும் முத்தூட் எக்ஸிம் நிறுவனங்களுடன் இணைந்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வழங்குவதற்கு முன்னதாக, சாக்லேட் தங்க நாணயங்களை டெலிவரி செய்து ஒரு தந்திரமான மார்க்கெட்டிங்க் யுக்தியைக் கையாண்டது பலராலும் பாராட்டப்பட்டது.
பிக்பாஸ்கெட் (bigbasket):
டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிக் பாஸ்கட், டேனிஷ்க் மற்றும் MMTC-PAMP நிறுவனங்களுடன் இணைந்து பிக்பாஸ்கெட் நிறுவனம், லக்ஷ்மி தேவியின் உருவம் பொறித்த தங்க நாணயங்கள் முதல் ஆலமர இலை வடிவிலான வெள்ளி கட்டிகள் வரை அனைத்தையும் வழங்குகிறது.
பிக் பாஸ்கட் வாடிக்கையாளர்கள் இந்த ஆக்ஷய திருதியை பண்டிக்கைக்கு MMTC-PAMP லக்ஷ்மி விநாயகர் (999.9 தூய்மை) வெள்ளி நாணயம், 10 கிராம்; MMTC-PAMP ஆலமர இலை (999.9 தூய்மை) வெள்ளி பார், 10 கிராம்; டேனிஷ்க் 22 காரட் தங்க நாணயம், 1 கிராம்; டேனிஷ்க் 22 காரட் லக்ஷ்மி தேவி உருவம் பொறித்த தங்க நாணயம், 1 கிராம் ஆகியவற்றை வாங்க வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
ஜெப்டோ (Zepto): இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஜெப்டோ நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வழங்குகிறது. இந்நிறுவனம் 1 கிராம் மற்றும் 0.5 கிராம் 24 காரட் தங்க நாணயங்கள் மற்றும் 10 கிராம் வெள்ளி நாணயங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு விற்கிறது.
மக்களே உஷார்: விரைவான டெலிவரி சேவையைப் பயன்படுத்தும் போது, பாரம்பரிய நகைக்கடைகளில் கிடைக்கும் தங்க விலையை விட சற்று அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும், இதுபோன்ற ஆன்லைன் தளங்களில் தங்கம் வாங்கும் போது, தயாரிப்பு விவரங்கள், திரும்பப் பெறுதல் கொள்கை மற்றும் தங்கத்தின் தூய்மை ஆகியவற்றில் கேள்வி எழும் நிலை மக்கள் மத்தியில் உள்ளது.


Click it and Unblock the Notifications