பெருநகரங்களில் வசிப்பவர்கள் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. நமக்கு தேவையான உணவினை நமக்கு பிடித்த உணவகத்திலிருந்து வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து சாப்பிடக்கூடிய ஒரு வாய்ப்பினை இந்த செயலிகள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றன.
நாம் நேரடியாக கடைக்கு சென்று அந்த உணவை வாங்குவதற்கும் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற தளங்கள் வாயிலாக ஆர்டர் செய்து வாங்குவதற்கும் இடையே இருக்கக்கூடிய விலை வித்தியாசம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாத பொருளாக மாறி இருக்கிறது.

கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபர் கடையை விட ஸ்விக்கி தளத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக விலை உயர்த்தி உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றனர் என ஆதாரத்தோடு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். சுந்தர் என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் பதிவில் நேரடியாக கடைக்கு சென்று வாங்கும் போது உணவின் விலை என்ன, ஸ்விக்கியில் ஆர்டர் செய்யும் போது விலை என்ன என்பதை ரசீதுடன் பதிவு செய்துள்ளார்.
இதன்படி அவர் சர்தார் ராவுத்தர் என்ற உணவகத்தில் நேரடியாக சென்று உணவு வாங்கும் பொழுது பரோட்டா, சிக்கன் 65, சிக்கன் லாலிபாப், சிக்கன் தொக்கு பிரியாணி ஆகியவற்றுக்கு சேர்த்து மொத்தமாக அவர் செலுத்தக்கூடிய தொகை 810 ரூபாய். இதே உணவை அவர் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யும் போது அவர் செலுத்த வேண்டிய தொகை 1473 ரூபாய். அதாவது நேரடியாக சென்று வாங்குவதை விட 81% கூடுதலாக அதே உணவுக்கு கட்டணம் செலுத்துகிறோம் என குறிப்பிட்டு இருக்குகிறார்.

என்னுடைய வீட்டில் இருந்து இந்த கடை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது இந்த இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று அதை வாங்கி வருவதற்கு பதிலாக வீட்டிலிருந்தே ஆர்டர் செய்யும் சவுகரியத்தை எனக்கு தருகிறது ஸ்விக்கி ஆனால் இந்த சவுகரியத்திற்காக நான் செலுத்தக்கூடிய கூடுதல் கட்டணம் 663 ரூபாய் என தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது.
அடுத்த முறை நான் போர்ட்டர் செயலி வாயிலாக என்னுடைய உணவை ஆர்டர் செய்து கூடுதலாக 100 ரூபாய் மட்டுமே செலுத்தி உணவை டெலிவரி பெற்றுக் கொள்ளப் போகிறேன் என அவர் தெரிவித்து இருக்கிறார். ஒரு பயனர் வழக்கமாக 30 சதவீதம் விலை அதிகமாக இருக்கும் ஆனால் 80 சதவீதம் என்பது மிக அதிகம் எனக் கூறியிருக்கிறார். ஒரு சில பயனர்கள் உங்களின் சவுகரியத்திற்கு நீங்கள் இந்த கூடுதல் கட்டணத்தை செலுத்தி தான் ஆக வேண்டும் என பதில் அளித்து இருக்கின்றனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications