சென்னை: உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகிறது . சென்னையிலும் ஆபரண தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் தங்கம் ஆபரண தங்கம் ஒரு சவரன் 75,000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை உயர்ந்து 9,380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் 74 , 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று 80 ரூபாய் விலை உயர்வு கண்டு 75 ,040 ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 75,000 ரூபாயை கடந்திருப்பது சாமானிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

24 கேரட் தங்கம் விலை: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 11 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது .நேற்று 10,222 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று 10,233 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் 88 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 81,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து உயரும் தங்கம்: சென்னையில் 18 கேரட் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் ஐந்து ரூபாய் விலை உயர்ந்த 7750 ரூபாயாக இருக்கிறது ஒரு சவரனுக்கு 40 ரூபாய் விலை உயர்வு கண்டு 62,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதலே தங்கம் விலை ஏற்றத்திலேயே தான் இருக்கிறது.
ஆகஸ்ட் 1 முதல் எவ்வளவு உயர்வு: சென்னையில் ஆபரண தங்கம் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் 9,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, ஒரு சவரன் 73,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதுவே 6 நாட்களில் ஒரு கிராமுக்கு 230 ரூபாய் விலை உயர்ந்துள்ளது ஒரு சவரனுக்கு 1840 விலை அதிகரித்து இருக்கிறது. வெள்ளியை பொருத்தவரை இன்று ஒரு கிராமுக்கு 1 ரூபாய் விலை உயர்ந்து 126 ரூபாய்க்கும் ஒரு கிலோ 1, 26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
என்ன காரணம்: அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கையால் உலகளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தை நோக்கி முதலீட்டாளர்கள் வருகை தருகின்றனர். இதுவே உலகளவிலும் இந்திய அளவிலும் தங்கத்தின் விலை உயர காரணமாக இருக்கிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications