சென்னை: தங்க நகைகளுக்கும் இந்திய மக்களுக்குமான உறவு மிக நெருக்கமானது. அதனால் தான் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் என்பது சாமானிய மக்களிடையே நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சென்னையில் இன்று தங்கம் விலை நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆபரணத்தங்கம் : தங்கம் கடந்த ஜனவரி மாதம் முதலே ஏற்ற இறக்கத்துடனே தான் இருக்கிறது. இருந்தாலும் இறங்கியதை விட விலை ஏறியது தான் அதிகம் என கூறலாம். கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாயும் , சவரனுக்கு 400 ரூபாயும் விலை குறைந்திருந்தது. 22 கேரட் ஆபரண தங்கம் சென்னையில் ஒரு கிராம் 9,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கம் 400 ரூபாய் வரை விலை குறைந்து 73, 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினமும் தங்கம் அதே விலைக்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

விலை குறைவை தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு: கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் என உயர்ந்தது, செவ்வாய்க்கிழமை என்று ஒரே அடியாக 150 ரூபாய் என விலை உயர்ந்தது, புதன்கிழமை அன்று மீண்டும் 95 ரூபாய் விலை உயர்வு கண்டது. வியாழக்கிழமை முதல் தங்கத்தின் விலை சரிய தொடங்கியது. வியாழக்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 125 ரூபாய் தங்கத்தின் விலை குறைந்தது, அதேபோல வெள்ளிக்கிழமை அன்று 45 ரூபாய் என விலை சரிவு கண்டது. சனிக்கிழமை 50 ரூபாய் விலை குறைந்தது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிராமுக்கு 220 ரூபாயும் சவரனுக்கு 1760 ரூபாயும் விலை குறைந்தது. இன்றைய தினம் எந்த மாற்றமும் இல்லாமல் தங்கம் விலை விற்கப்படுவதால் சனி, ஞாயிறு தங்கம் வாங்காமல் விட்டவர்கள் அந்த வாய்ப்பை இன்று பயன்படுத்தி கொள்ளலாம்.
24 கேரட் தங்கம் விலை: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரையில் ஒரு கிராம் தங்கம் 9,993 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 80,000 ரூபாய்க்கு கீழ் சென்று 79 ,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கிராம் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் தங்கம் 7550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 60,400 ரூபாய் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை: வெள்ளி விலையில் இன்று எந்த ஒரு மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் 126 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1, 26,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications