அக்டோபர் மாத இறுதியில் இருந்து குறைந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது. இதனால் மீண்டும் தங்கம் விலை ஏறுமுகமாக மாறி இருக்கிறதா என்ற குழப்பம் உண்டாகியுள்ளது.
உலக பொருளாதார சூழல், உள்நாட்டில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்தது ஆகிய காரணங்களால் சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இதனை அடுத்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது .

சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 11, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்று 110 ரூபாய் விலை உயர்வு கண்டு 11,410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 880 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது . 90,400 ரூபாய்க்கு நேற்று விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 91,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு 91,000ஐ கடந்துள்ளது.
ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்திருப்பது மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது . கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் விலை உயர்ந்த தங்கம் மூன்று நாட்கள் விலை சரிந்தது. இந்த வாரமும் அதே போக்கு நீடிக்கவே வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 12,328 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 12,448 ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஒரு சவரனுக்கு 960 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 99,584 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராமுக்கு 90 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது ,நேற்று 9425 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று 9,515 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 720 ரூபாய் விலை உயர்வு கண்டு 76,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .
தங்கம் மட்டுமல்ல இன்றைய தினம் வெள்ளியின் விலை தடாலடியாக உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்று இரண்டு ரூபாய் விலை உயர்ந்து 167 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . ஒரு கிலோவிற்கு 2000 ரூபாய் விலை உயர்வு கண்டு 1,67,000 ரூபாய்க்கு வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது.கடந்த அக்டோபர் 15ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 207 ரூபாய் என்ற உச்சத்தை எட்டிய நிலையில் பின்னர் படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த இரண்டு வாரங்களாக வெள்ளி விலை 165 ரூபாயிலிருந்து 168 ரூபாய்க்குள் ஏறி இறங்கி வருகிறது.
தங்கம், வெள்ளியின் விலை வரலாற்று உச்சத்தில் இருந்து சரிந்துள்ளன. தற்போது விலை திருத்ததில் இருக்கிறது. இனி மேற்கொண்டு தங்கம் விலை உயருமா இல்லையா என்பதை அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்படும் வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்க மத்திய வங்கியின் நாணய கொள்கை ஆகியவையே முடிவு செய்யும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications