சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்து மிடில் கிளாஸ் மக்களை கண்ணீர் வடிக்க செய்திருக்கிறது. அக்டோபர் 18ஆம் தேதிக்கு பின்னர் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வந்தது. இதனை அடுத்து இந்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் உயர தொடங்கியது.
திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களிலும் உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் திடீரென குறைந்தது. இந்த தங்கம் விலை குறைவு அப்படியே நீடிக்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று தடாலடியாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 200 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் , இன்று 11,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது .

ஒரு சவரன் தங்கம் 1600 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது . நேற்று 92,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 94,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் இப்படி தடாலடியாக விலை உயர்ந்திருப்பது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது . திங்கட்கிழமை ஆன 10ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அது இன்று 11,800 ரூபாயாக உயர்ந்து இருக்கிறது அதாவது இந்த மூன்று நாட்களில் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது. ஒரு சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்துள்ளது.
மதுரை, திருச்சி, கோவையில் தங்கம் விலை நிலவரம் என்ன?
24 கேரட் தங்கமும் இன்றைய தினம் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்று 12,656 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 217 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 12,873 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 1,736 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நேற்று 1,01,248 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று 1,02,984 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
18 கேரட் தங்கம் கிராமுக்கு 185 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 9,850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 1,480 ரூபாய் விலை உயர்ந்து 78,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்னும் ஷாக் கொடுக்கிறது. ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு 9 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 173 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளி இன்று 182 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 9,000 ரூபாய் விலை உயர்ந்து 1,82,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரலாற்று உச்சத்தில் இருந்து வெள்ளி மற்றும் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் இரண்டுமே மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. இது மிடில் கிளாஸ் மக்களுக்கு மீண்டும் கண்ணீரை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!



Click it and Unblock the Notifications