விருந்தோம்பல் துறையை சேர்ந்த சங்கிலித் தொடர் நிறுவனமும், பிரபல ஹோட்டல் புக்கிங் தளமுமான ஓயோ நிறுவனத்தை தனது 19 வயதில் தொடங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் ரித்தேஷ் அகர்வால். இந்த ஆண்டு தொடக்கத்தில் ரித்தேஷ் அகர்வால் தனது நீண்ட கால காதலியான கீதன்ஷாவை கரம் பிடித்தார். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஓயோ நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான ஜப்பானை சேர்ந்த சாப்ட்பேங்க் குழுமத்தின் தலைவர் மசயோசி சன் நேரில் வந்து கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கடந்த அக்டோபரில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை பொது வெளியில் பகிர்ந்தார். இது தொடர்பாக அப்போது ரித்தேஷ் அகர்வால் எக்ஸில், 11 ஆண்டுகளுக்கு முன்பு நான் கீத்தை சந்தித்தேன். நான் ஒரு இளைஞனாக கனவுகளை துரத்தும்போது, புதிதாக எனது சொந்த நிறுவனத்தை உருவாக்க விரும்புகிறேன் என்று என் குடும்பத்தை நம்ப வைக்க முயன்றேன், எல்லாவற்றிலும் என் பக்கத்தில் இருந்த ஒரே ஒரு நிலையான நபர், அது அவள்தான். மகிழ்ச்சி மற்றும் மைல்கற்களின் உச்சங்கள், வலி மற்றும் இழப்புகளின் தாழ்வுகள், நாங்கள் ஒன்றாக நிறைய கடந்து விட்டோம் என்று பதிவு செய்து இருந்தார்.

தற்போது ரித்தேஷ் அகர்வால்-கீதன்ஷா சூட் தம்பதியினர் பெற்றோராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கீதன்ஷா சூட் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார். அகர்வால்-கீதன்ஷா தம்பதியினர் தங்களது குழந்தைக்கு ஆர்யன் என பெயரிட்டுள்ளனர். இது தொடர்பாக, ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் எக்ஸில், வாழ்க்கையின் அதிசயம் பேரழகு வாய்ந்தது, நம் இதயங்கள் என்றென்றும் மாறுகின்றன.
எங்கள் விலைமதிப்பற்ற குட்டியை சந்திக்கவும்-ஆர்யன். ஓயோவை கட்டியெழுப்பிய தூக்கில்லாத இரவுகள், பெற்றோராக சந்திக்கும் தூக்கமில்லாத இரவுகளுக்கு ஒரு வார்ம் அப் மட்டுமே, ஆனாலும் இந்த நேரத்தில் நான் இருப்பதை விட நான ஒரு போதும் மிகிழ்ச்சியாக இருந்தததில்லை. இதோ என் மிகச் சிறந்த மனைவி கீத், மகிழ்ச்சியின் பொதியான ஆர்யன் மற்றும் நாங்கள் ஒன்றாக எழுதும் அன்பு, சிரிப்பு நிறைந்த புதிய அத்தியாயம். ஒரு சிறியவர் மட்டும் தரும் விவரிக்க முடியாத மகிழ்ச்சி என்று பதிவு செய்துள்ளார்.
1993ல் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் மார்வாடி குடும்பத்தில் பிறந்தவர் ரித்தேஷ் அகர்வால். இவர் பள்ளிப்படிப்பை சொந்த மாநிலத்தில் முடித்தார். பின்பு உயர் கல்விக்காக டெல்லிக்கு சென்றார். இருப்பினும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, சொந்த தொழில் முயற்சியில் இறங்கினார். 2013ல் ஓயோவை தொடங்கினார். ஆரம்ப நாட்களில் பணம் சம்பாதிப்பதற்காக சிம் கார்டுகளை விற்பனை செய்தார். தற்போது ஓயோ ரூம்ஸ் 80 நாடுகளில் 800க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. ரித்தேஷ் அகர்வாலின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.16,000 கோடி என தகவல்.


Click it and Unblock the Notifications