வீடுகளில் முன்பு மாதிரி மசாலாக்கள் தயாரித்து உணவில் பயன்படுத்துவது கிட்டத்தட்ட நின்று விட்டது. பெண்கள் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் மசாலா பொருட்களை வாங்கி பயன்படுத்தி உணவை சமைத்து வருகின்றனர்.
இந்திய மசாலா சந்தையில் எம்.டி.ஆர்.,எம்.டி.எச். மற்றும் எவரெஸ்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு மத்தியில் தனித்துவமாக விற்பனையில் கலக்கி வருகிறது நரேஷ் பகாரியாவின் குவாலிட்டி பிராண்ட் மசாலா பொருட்கள். நரேஷ் பகாரியாவின் வாழ்க்கை பயணத்தை கொஞ்சம் பார்ப்போம்.

1960களின் பிற்பகுதியில் ராஜஸ்தான் மாநிலம் சோஜாட்டை சேர்ந்த பவர்லால் ஜி பகாரியா தனது குடும்பத்துடன் பெங்களூருவுக்கு புலம் பெயர்ந்தார். அங்கு சிறிய பலசரக்கு கடையை தொடங்கினார். அந்த கடையை சுமார் 30 ஆண்டுகளாக நடத்தினார்.
பல ஆண்டுகளாக தந்தையின் வியாபாரத்தை உன்னிப்பாக கவனித்து வந்த அவரது மகன் நரேஷ் பகாரியா, மசாலாக்களை வாங்கி விற்பனை செய்வதை காட்டிலும் சொந்தமாக தயாரித்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று தந்தையிடம் ஆலோசனை தெரிவித்தார். இதனையடுத்து அவரது தந்தை நான்கு வகையான மசாலாக்களை தயாரித்து விற்பனை செய்தார்.
படிப்பு முடிந்ததும் நரேஷ் பகாரியா மசாலா உற்பத்தி தொழிலை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1998ல் விரிவாக்கம் மற்றும் பலவிதமான மசாலா பொருட்களை தயாரிக்கும் முயற்சியில், சிறிய கடையிலிருந்து மகடி சாலையில் 300 சதுர அடி இடத்துக்கு மாறினார்.
தனது வர்த்தக நிறுவனத்துக்கு பகாரியா புட்ஸ் என்றும், குவாலிட்டி புட்ஸ் என்ற பிராண்டில் மசாலா பொருட்களை விற்பனை செய்தார். 8 விதமான மசாலக்களை தயாரித்து பெங்களூருவை தாண்டி விற்பனை செய்ய தொடங்கினார். துமகுரு மற்றும் அனந்தபூர் போன்ற அருகிலுள்ள நகரங்களில் விற்பனை செய்ய தொடங்கினார். ஒரு வருடம் கழித்து, ராஜாஜி நகரில் மற்றொரு புதிய உற்பத்தி பிரிவை அவர் தொடங்கினார். இது முந்தைய உற்பத்தி பிரிவை விட 5 மடங்கு பெரியதாகும்.
அதன் பிறகு அவர் 2002ல் புதிய வர்த்தகத்தில் களம் இறங்கினார். அப்போது இருந்த உற்பத்தி திறன்களை பயன்படுத்தி தானியங்களை உற்பத்தி செய்ய தொடங்கினார். இது உடனடியாக வெற்றி கண்டது. இவரது தயாரிப்புகளில் செயற்கை நிறங்கள்/சுவைகள் அல்லது பிரசர்வேடிவ் எதுவும் கலக்கப்படுவதில்லை.
தென்னிந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அவரது வர்த்தகம் விரிவடைந்தது. இந்த சூழ்நிலையில் அவரது உறவினர் தீரஜ் ஜெயின் வர்த்தகத்தில் இணைந்தார். இது அவருக்கும் பெரிதும் உதவியாக இருந்தது மற்றும் வர்த்தகமும் விரிவடைந்தது. இந்நிலையில் 2006ல் பொது வர்த்தகம், நவீன் வர்த்தகம், இ காமர்ஸ் மற்றும் ஏற்றுமதி ஆகிய 4 பிரிவு வர்த்தகங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.
வாடிக்கையாளர்களை சென்றடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற ஊடகங்கள் மூலம் மார்க்கெட்டிங் செய்வதற்கான டிஜிட்டல் உத்தியையும் பகாரியா புட்ஸ் மேற்கொள்கிறது. 2020ல் பகாரியா புட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.50 கோடியை எட்டியது.
எஸ்.எம்.இ. போர்ம் விருது 2013, சிறந்த வளர்ந்து வரும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்துக்கான டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் விருது மற்றும் முதலீடு கர்நாடக உச்சி மாநாட்டில் நல்ல உற்பத்தி சிறப்பு விருது போன்ற மதிப்புமிக்க விருதுகளையும் பகாரியா புட்ஸ் வென்றுள்ளது.
நரேஷ் பகாரியா பேட்டி ஒன்றில், நாங்கள் டிரெண்டை காட்டிலும் வேகமாக வளர்ச்சி கண்டு, இந்தியாவின் அனைத்து மெட்ரோ நகரங்களுக்கும் வர்த்தகத்தை விரிவுபடுத்துவோம். அதேசமயம் மூலோபாயத்தின் முக்கியமாக, எங்கள் தயாரிப்புகள் ஆரோக்கியமானவை, சத்தானவை மற்றும் மலிவு விலையில் இருப்பதை நாங்கள் நினைவில் கொள்வோம் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications