அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் நமது பங்காளி நாடான பாகிஸ்தானின் நிலைமை மோசமாக உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் தான் சுதந்திரம் பெற்றது இருப்பினும் நிதி, அறிவியல், விண்வெளி என அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கி உள்ளது.
ஆசியாவின் டாப் 10 மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டு இந்தியர்கள் உள்ளனர் ஆனால் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. இருப்பினும் இதற்காக தங்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பெரிய தொழிலதிபர்களை உருவாக்க பாகிஸ்தான் தவறி விட்டது என்று அர்த்தமல்ல.

பாகிஸ்தானிலும் பல வெற்றிகரமான தொழிலதிபர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் திறமை மூலம் பெரிய அளவில் சம்பாதித்துள்ளனர். பாகிஸ்தானின் கோடீஸ்வரர்களை பற்றி பேசும்போது முதலில் வரும் பெயர் மியான் முகமது மன்ஷா.
அந்நாட்டின் இரண்டாது பெரிய கோடீஸ்வரான இவரை பாகிஸ்தானின் முகேஷ் அம்பானி குறிப்பிடுகின்றனர். இவரது மகன் மியான் உமர் மன்ஷா. இவர் 2007 செப்டம்பர் முதல் நிஷாத் மில்ஸின் தலைமை நிர்வாகியாக இருந்து வருகிறார். மேலும் ஆடம்ஜி இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் BoDன் தலைவராகவும் உள்ளார்.
மியான் உமர் மன்ஷாவின் மனைவி இக்ரா ஹாசன். இவர்தான் அந்நாட்டின் பணக்கார பெண்மணி. பாகிஸ்தான் பாரம்பரியத்தை கொண்டிருந்தாலும் இவர் தனது வாழ்நாளின் நீண்ட காலத்தை இங்கிலாந்தில் கழித்துள்ளார்.
இக்ரா ஹாசன் லண்டனில் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் சர்வதேச அரசியலில் பி.எஸ்.சி. பட்டமும், லண்டன் பல்கலைக்கழக ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸில் சர்வதேச உறவுகளில் எம்.எஸ்.சி. பட்டமும் பெற்றவர். இங்கிலாந்து சந்தையை பற்றி இக்ரா நன்கு அறிந்து வைத்துள்ளார்.
இது, பாகிஸ்தானில் உள்ள சொத்து மற்றும் லண்டனில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலை நிர்வகிக்கும் நிஷாத் ஹோட்டல்கள் மற்றும் சொத்துக்களை சிறப்பாக நடத்தும் வெற்றிகரமான சி.இ.ஓ.வாக அவரை ஆக்கியது.
இது தவிர இவர் மேலும் பல நிறுவனங்களில் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். என்னதான் பாகிஸ்தானின் பணக்கார பெண்மணி என்று சொன்னாலும் இவரது சொத்து மதிப்பு நம்ம அம்பானி, அதானி சொத்து மதிப்புக்கு பக்கத்தில் வர முடியாது. இக்ரா ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.8,300 கோடி தான். ஆனால் நம்ம முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.7.63 லட்சம் கோடி.


Click it and Unblock the Notifications