வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் கடலை மிட்டாயில் 16 கோடி வருமானம் ஈட்டி பெரும் சாதனை படைத்துள்ளது பழனியை சேர்ந்த ஒரு நிறுவனம். தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் கடலை மிட்டாய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் வேளையில் இத்துறையில் நீண்ட காலமாக இருக்கும் பழனியை சேர்ந்த நிறுவனம் இப்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வரையில் உயர்ந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.
1985 ஆம் ஆண்டு எஸ்.அழகர் என்பவரால் உருவாக்கப்பட்டு, இன்று அவருடைய மகன் ஏ.சந்திரசேகரன் நிர்வாகம் செய்யும் நிறுவனம் தான் இந்த Sacs Foods. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்திய அளவில் சிக்கி எனப்படும் கடலை மிட்டாய், எள்ளு உருண்டை உற்பத்தி மற்றும் சப்ளையில் முன்னணி நிறுவனமாக உள்ளது Sacs Foods.

சிறிய அளவில் உருவான நிறுவனம் தற்போது மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக உயர்ந்துள்ளது. ஒரு நாளுக்கு 5000 கிலோ கடலை மிட்டாய் தயாரித்து இந்தியா முழுவதும் விற்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 110 டிஸ்ட்ரிபியூட்டர்கள் இருப்பதாக Sacs Foods தலைவர் ஏ.சந்திரசேகர் கூறுகிறார். தமிழ்நாட்டை தாண்டி Sacs Foods-க்கு முக்கிய வர்த்தக பகுதியாக இருப்பது டெல்லி தான்.
Sacs Foods நிறுவனம் தமிழ்நாட்டை தாண்டி இந்திய அளவிலான விற்பனையில் அசத்தி வரும் நிலையில் ஓமன், கத்தார், பக்ரைன், சவுதி அரேபியா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பனையாகிறது. வெளிநாடுகளிலும், வட இந்தியாவிலும் வெள்ளை எள் மூலம் தயாரிக்கப்படும் எள்ளு உருண்டைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், குறிப்பாக அரபு நாடுகளில் அதிகளவிலான விற்பனை பதிவாகிறது என சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Sacs Foods நிறுவனம் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கிய பின்பு வர்த்தகம் வளர்ச்சி அடைந்த வேகத்தில் வருமானமும் உயர துவங்கியுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 16 கோடி ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது என சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கடலை மிட்டாயில் இவ்வளவு பெரிய வெற்றியை அடைய முக்கியமாக காரணம் சந்திசேகரன் சந்தை எஸ் அழகர் கொண்டு வந்த பேக்கேஜ் முறை தான், பல ஆண்டுகளுக்கு முன்பே கடலை மிட்டாய் தயாரிக்கப்பட்ட பின்பு பேக் செய்யும் போது தயாரிக்கப்பட்ட நாள், பேட்ச் நம்பர், எக்ஸ்பையரி நாள் போன்ற முக்கியமான விபரங்களை அச்சிட்டு வழங்கிய போது வாடிக்கையாளர் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கை அதிகரித்து, பிராண்ட் மதிப்பு அதிகரித்தது என கூறினார் சந்திரசேகரன்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications