இன்டர்நெட் நம் வாழ்க்கையை எளிதாக்கியிருந்தாலும், அதைச் சுற்றியுள்ள மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் பண பரிவர்த்தனைகள், போலி விற்பனை என பல்வேறு வழிகளில் மோசடி சம்பவங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்கும் நபர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அண்மையில், புனேயில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது. தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பார்சல் மோசடியில் சிக்கி ரூ. 12 லட்சத்தை இழந்துள்ளார். இந்த மோசடி எவ்வாறு நடந்தது, இதில் இருந்து எவ்வாறு நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
புனேவில் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஊழியர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பார்சல் மோசடியில் சிக்கி ரூ.12 லட்சத்தை இழந்துள்ளார். கொரியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என்று கூறி ஒரு நபரிடம் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. அதில் காலாவதியான பாஸ்போர்ட் மற்றும் அதிக அளவு போதைப்பொருள் போன்ற சட்டவிரோத பொருட்களைக் தைவானுக்கு பாதிக்கப்பட்டவர் அனுப்பியதாக மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர்.

மோசடிக்காரர்கள் பொதுவாக ஒரு சில தந்திரங்களை கையாளுகின்றனர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட நபர்களை பயமுறுத்தி ஒரு செயலை செய்ய வைப்பது தான் இன்னும் வேதனை. சட்டவிரோதமான பார்சலை உடனடியாக அகற்றாவிட்டால், உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி பாதிக்கப்பட்ட அந்த நபரிடம் பயமுறுத்தும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆள் மாறாட்டத்தனத்தை இன்னும் அதிகரிக்கும் வகையில் மோசடிக்கார கும்பலை சேர்ந்த இன்னொரு நபர் தான் போலீஸ் அதிகாரி என்று கூறி பாதிக்கப்பட்டவரிடம் பேசியுள்ளார்.
இதுபோன்ற பார்சல் மோசடிகளில் மக்கள் ஏமாற்றப்படுவது, இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பும் பலர் இதுபோன்ற மோசடிகளில் சிக்கி லட்சக்கணக்கான ரூபாயை இழந்துள்ளனர். இதே யுக்தியை தான் புனேவை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபருக்கும், அந்த மோசடிக்காரர்கள் செய்துள்ளனர். இதன் விளைவாக சட்ட விரோத பொருட்களை அனுப்பாமலேயே பாதிக்கப்பட்டவர் ரூ. 12 லட்சம் ரூபாயை மோசடிக்காரர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இது போன்ற மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான குறிப்புகள்
1) தெரியாத நபர்களுக்கு மொபைல் மூலம் தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டாம்.
2) உங்களுக்கு வரும் தகவல்களை ஆதாரத்துடன் சரிபார்க்கவும் (செய்தி சேவை, அங்கீகரிக்கப்பட்ட அலுவலகம் போன்ற தகவல்கள் இதில் அடங்கும்).
3) மின்னஞ்சலில் உள்ள இணைப்புகள் அல்லது பிற இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்.
4) தெரியாத தொலைபேசி அழைப்புகள் அல்லது நிதி பரிவர்த்தனைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
பார்சல் மோசடிகள், SMS மோசடிகள் தற்போது அதிகரித்துள்ள காரணத்தினால் உங்களுக்கும் இதே போன்ற அழைப்புகள் வரலாம். இது போன்ற சமயங்களில் உஷாராக இருக்க வேண்டியது முக்கியம். நீங்கள் எந்த விதமான பார்சலையும் பிறருக்கு அனுப்பவில்லை என்றால் தைரியமாக இருக்கலாம்.
ஆனால் பார்சல் மோசடிகளில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை என்னவென்றால் பயத்தில் முடிவெடுப்பது தான். இது போன்ற சூழ்நிலைகளில், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். நீங்கள் செய்யாத தவறுக்கு ஆன்லைனில் தீர்வு காண நினைப்பது என்றுமே சரியான தீர்வாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications