ஆனானப்பட்ட Parle G-க்கு இப்படியொரு பிரச்சனையா..? 20 வருடத்தில் நடந்திடாத சம்பவம்..!!

ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைத்தது மூலம் அனைத்து துறையிலும் வர்த்தகம் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக FMCG, ஆட்டோமொபைல் துறையில் வர்த்தகம் அதிகரித்துள்ளது தெரிகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மூலம் இந்திய மக்கள் கையில் உபரியாக சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த பணத்தை மக்கள் அத்தியாவசிய தேவையை தாண்டி பிற பொருட்களை வாங்க செலவு செய்வார்கள் என மத்திய அரசு நம்புகிறது. இதனால் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏற்படும் சரிவை எளிதாக ஈடு செய்ய முடியும் என நம்புகிறது. இப்படியிருக்கையில் Parle G போன்ற நுகர்வோர் பிராண்டுகள் புதிதாக ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளது.

ஆனானப்பட்ட Parle G-க்கு இப்படியொரு பிரச்சனையா..? 20 வருடத்தில் நடந்திடாத சம்பவம்..!!

இந்தியாவின் மிகவும் பிரபலமான பிஸ்கட் பிராண்டான பார்லே-ஜி கடந்த 20 வருடங்களாக ரூ.5 என்ற விலையில் தனது சிறிய பிஸ்கட் பாக்கெட்டை விற்று வந்தது. இந்த விலை எந்த காலக்கட்டத்திலும், விலைவாசி எவ்வளவு உயர்ந்தாலும் மாறாமல் இருந்த நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் செய்யப்பட்ட மாற்றத்தால் முதல் முறையாக குறைத்துள்ளது.

செப்டம்பர் 22, 2025 திங்கட்கிழமை அன்று அமலுக்கு வந்த புதிய ஜிஎஸ்டி முறையின் காரணமாக, இந்த 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் விலை இப்போது ரூ.4.45 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை பார்லே-ஜி பிராண்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பாலான FMCG துறை நிறுவனங்களுக்கு இப்புதிய மாற்றத்தின் மூலம் பிரச்சனை வெடித்துள்ளது.

ரூ.1 மிட்டாய் இப்போது 88 பைசாவாகவும், ரூ.2 ஷாம்பு சாச்செட் ரூ.1.77 ஆகவும் மாறியுள்ளன. பிரபலமான பிராண்டுகளின் வெற்றிக்கு விலை மிகவும் முக்கியம், அதிலும் குறிப்பாக 1 ரூபாய், 2ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் பொருட்கள் அனைத்தும் விலையை நம்பி தான் மொத்த வர்த்தகமும் உள்ளது. ஏன் இந்த விலை குறைப்பு..?

புதிய ஜிஎஸ்டி முறையின் கீழ், நுகர்வோருக்கு வரி குறைப்பு நன்மைகளை முழுமையாக அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து கார்ப்ரேச் நிறுவனங்களையும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இந்த நன்மைகளை எவ்வாறு அளிப்பது என்பதில் நிறுவனங்களுக்கு தெளிவான புரிதல் இல்லை.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் பொருள்களின் விலையை குறைப்பதற்கு பதிலாக, எடையை அதிகரித்து அதே விலையை வைத்திருக்கலாமா என்ற கேள்வி நிறுவனங்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இது சட்டரீதியாக செல்லுபடியாகுமா என்று அரசிடம் இருந்து இன்னும் தெளிவான வழிகாட்டுதல் இல்லை.

ஆனானப்பட்ட Parle G-க்கு இப்படியொரு பிரச்சனையா..? 20 வருடத்தில் நடந்திடாத சம்பவம்..!!

இதனால், பார்லே-ஜி போன்ற நிறுவனங்கள், பாரம்பரியமான ரூ.5, ரூ.10 போன்ற விலை நிலைகளை கைவிட்டு, ரூ.4.45 போன்ற புதிய விலையில் பொருட்களை விற்க துவங்கியுள்ளது. இந்த மாற்றம், மளிகைக் கடைகளில் அதிகம் விற்பனையாகும் சிறிய பாக்கெட் பொருள்களை பாதிக்கிறது, சில்லறை பிரச்சனை உருவாகும் நிலை உள்ளது.

தற்போது இது பெரும் தலைவலியாக பார்க்கப்பட்டாலும் யூபிஐ பேமெண்ட், மற்ற பொருட்களுடன் சேர்த்து வாங்கும் போது அல்லது ஒரே பொருட்களை இரண்டாக வாங்குவது மூலம் இந்த சில்லறை பிரச்சனை தற்காலிகமாக தீர்க்கப்படலாம். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் FMCG நிறுவனங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய சாக்லேட் உற்பத்தியாளரான மொன்டெலெஸ் இந்தியா, தனது அனைத்து பொருள்களின் விலைகளையும் மாற்றியுள்ளது. உதாரணமாக, போர்ன்விட்டாவின் விலை ரூ.30 இலிருந்து ரூ.26.69 ஆகவும், ஓரியோ பிஸ்கேட் ரூ.10 இலிருந்து ரூ.8.90 ஆகவும், ஜெம்ஸ் மற்றும் 5ஸ்டார் ரூ.20 பாக்கெட் ரூ.17.80 ஆகவும் குறைந்துள்ளன.

இந்த விலை மாற்றங்கள், நுகர்வோருக்கு சிறிய சேமிப்பை அளித்தாலும், விற்பனையாளர்களுக்கும், உற்பத்தி நிறுவனங்களுக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

விலைவாசி உயரும் போது நிறுவனங்கள் எடையை குறைத்து அதே விலையில் விற்பது வாடிக்கையான விஷயம் தான், இதேபோல் வரி குறையும் போது எடையை உயர்த்தி அதே விலைக்கு விற்கலாம். ஆனால் 2017-இல் நடந்த சம்பவம் FMCG நிறுவனங்களை இதை செய்ய தடுக்கிறது.

2017ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது, வரி குறைப்பை நுகர்வோருக்கு பகிர்ந்தளிக்காததற்காக பல FMCG நிறுவனங்கள் தேசிய இலாப எதிர்ப்பு ஆணையத்தால் (NAA) அபராதம் விதிக்கப்பட்டன. இந்த அனுபவம், நிறுவனங்களை இப்போது மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வைத்துள்ளது.

இந்த விலை மாற்றங்கள், நடுத்தர மற்றும் ஏழை வகுப்பினருக்கு சிறிய அளவில் பணத்தை சேமிக்க உதவும். உதாரணமாக, பிரகாஷ் என்ற நபர் தனது குழுந்தையின் பிறந்த நாளுக்கு 5 ரூபாய் மதிப்புடைய மிட்டாய் 100 வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். ஒரு ரூபாய் மிட்டாய் விலை 88 பைசா குறைந்தால் மொத்த விலையில் 88 ரூபாய் குறையும்.

அந்த சேமிப்பு வேறு செலவுகளுக்கு, அதாவது ஒரு பிறந்த நாளை கொண்டாட பலூன் அல்லது சிறிய பரிசை வாங்க முடியும். இல்லையெனில் பேருந்து பயணத்திற்கான டிக்கெட் அல்லது ஆட்டோ-வில் செல்வது போன்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு இந்த சேமிப்பு பயன்பெறும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+