சுற்றுலா போங்க.. நாங்க காசு தர்றோம்! புதிய திட்டத்தில் மத்திய அரசு..!

மத்திய அரசு டீமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்ட் என பல திட்டங்களைக் கொண்டு வந்து பல தரப்பு மக்களையும் பதற வைத்து இருக்கிறது.

அடுத்தடுத்து சி ஏ ஏ, என் சி ஆர், என் பி ஆர் போன்ற பல திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.

இந்த திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட, அவைகளை எல்லாம் கூட கண்டு கொள்ளாமல் அசால்டாக தன் சட்டங்களை அமல்படுத்திக் கொண்டு இருக்கிறது.

புதிய திட்டம்

புதிய திட்டம்

இந்த வரிசையில் தற்போது, இந்தியாவில் இருக்கும் 15 சுற்றுலா தளங்களைச் சுற்றிப் பார்க்க, மத்திய அரசு பயண செலவுகளைக் கொடுக்க முடிவு செய்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதை "பர்யதன் பர்வ்" (Paryatan Parv)என்கிற திட்டத்தின் மூலம் செய்யப் போகிறார்களாம்.

அமைச்சர் பேச்சு

அமைச்சர் பேச்சு

இந்த செய்தியை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், நேற்று (ஜனவரி 24, 2020 வெள்ளிக் கிழமை) உறுதி செய்து இருக்கிறார். சமீபத்தில் , ஒடிஸா மாநிலத்தின் ஒடிஸா மாநில அரசும் ஃபிக்கி அமைப்பும் சேர்ந்து நடத்திய தேசிய சுற்றுலா மாநாட்டில் கொனார்க்கில் நடந்தது. அப்போது தான் இந்த செய்தியையும் உறுதி செய்து இருக்கிறார்கள்.

அமைச்சர் பேச்சு

அமைச்சர் பேச்சு

இந்த செய்தியை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், நேற்று (ஜனவரி 24, 2020 வெள்ளிக் கிழமை) உறுதி செய்து இருக்கிறார். சமீபத்தில் , ஒடிஸா மாநிலத்தின் ஒடிஸா மாநில அரசும் ஃபிக்கி அமைப்பும் சேர்ந்து நடத்திய தேசிய சுற்றுலா மாநாட்டில் கொனார்க்கில் நடந்தது. அப்போது தான் இந்த செய்தியையும் உறுதி செய்து இருக்கிறார்கள்.

யார் கொடுப்பார்கள்

யார் கொடுப்பார்கள்

இந்தியாவில் இருக்கும் 15 சுற்றுலா தளங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கான பயணச் செலவுகளை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் கொடுக்கும். ஆனால் ஒரே வருடத்தில் 15 சுற்றுலா தளங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டுமாம். அதோடு சுற்றுலாத் துறை வலைதளத்துக்கு போட்டோக்களையும் சமர்பிக்க வேண்டுமாம்.

விதி

விதி

இப்படி 15 சுற்றுலா தளங்களைச் சுற்றிப் பார்க்க பயணச் செலவுகளை மத்திய சுற்றுலா அமைச்சகத்திடம் இருந்து பெற, தங்களின் மாநிலங்களை விட்டு வெளியே வர வேண்டும். அதாவது தங்கள் மாநிலங்களில் இருக்கும் சுற்றுலா தளங்களை மட்டுமே சுற்றிப் பார்க்கக் கூடாது எனவும் சொல்லி இருக்கிறார் சுற்றுலா அமைச்சர்.

தெளிவு இல்லை

தெளிவு இல்லை

இந்த நேரத்தில் ஒரு கேள்வியும் எழுந்து இருக்கிறது. மத்திய சுற்றுலா அமைச்சர் சொன்னது போல, 15 சுற்றுலா தளங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாமா அல்லது மத்திய அரசு சொல்லும் சுற்றுலா தளங்களில் ஏதாவது 15 தளங்களுக்குத் தான் செல்ல வேண்டுமா..? என்கிற சந்தேகம் எழுகிறது.

சூரியனார் கோவில்

சூரியனார் கோவில்

சுற்றுலா செல்ல பயணச் செலவுகளை மத்திய அரசு கொடுக்கும் செய்திகளில் iconic sites என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதோடு ஒடிஸாவில் இருக்கும் கொனார்க் சூரியனார் கோவிலை, இந்த iconic sites பட்டியலில் சேர்க்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய சுற்றுலா அமைச்சர் பிரஹலாத் சிங் படேல்.

கிளம்ப வேண்டியது தானே

கிளம்ப வேண்டியது தானே

ஆக இந்த "பர்யதன் பர்வ்" (Paryatan Parv)என்கிற திட்டத்தைப் பற்றிய முழு விவரங்கள் (எந்த சுற்றுலா தளங்களை எல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும், எதில் பயணிக்க வேண்டும், தொடர்ந்து 15 சுற்றுலா தளங்களைச் சுற்றிப் பார்க்க முடியுமா... ) தெளிவாக வெளி வந்தால், பொட்டி படுக்கையோடு புளி சாதத்தைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட வேண்டியது தானே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+