இந்தியாவில் வரும் 22ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு நடைமுறைக்கு வருகிறது . மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்களின் விலை குறைய போகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய சோப்பு ஷாம்பு உள்ளிட்டற்றில் தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள், கார், இருசக்கர வாகனம் என பல்வேறு பொருட்களின் விலை குறைய போகிறது.
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கக்கூடிய சூழலில் ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களின் நுகர்வு போக்கை பெரிய அளவில் அதிகரிக்கும். இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பில் மிக முக்கியமான விஷயமாக கவனிக்கப்பட வேண்டியது காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி முழுவதுமாக நீக்கப்பட்டதுதான். இதுநாள் வரை இந்தியாவில் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு திட்டங்களுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி தொகையாக செலுத்தி வந்தோம். அதனை தற்போது பூஜ்ஜியமாக மாற்றி இருக்கிறார்கள்.

காப்பீடு திட்டங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய தேவையில்லை. காப்பீடு திட்டங்கள் வரியற்றவையாக மாறி இருக்கின்றன . இதன் மூலம் நாம் காப்பீடு திட்டங்களுக்காக செலுத்தும் பிரீமியம் தொகை என்பது கணிசமான அளவு குறைய இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு இல்லாமல் இருக்கிறது. அனைவருக்கும் இது சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஜிஎஸ்டி கவுன்சில் காப்பீடு திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வேண்டாம் என முழுவதுமாக விலக்கு தந்திருக்கிறது.
இதற்கிடையே டெல்லியில் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ஐஆர்டிஐ, பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது காப்பீட்டு நிறுவனங்கள் இந்த ஜிஎஸ்டி வரி விலக்கின் மூலம் கிடைக்கும் பலன்களை நேரடியாக பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கராராக தெரிவிக்கப்பட்டது .
மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் செயலாளர் நாகராஜு இந்த கூட்டத்தில் பேசிய போது அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் இந்த ஜிஎஸ்டி வரி விலக்கு பலன்கள் முழுவதும் பாலிசிதாரர்களுக்கு சென்ற சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறினார். ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் காரணமாக காப்பீடு பிரீமியங்கள் எவ்வளவு குறைந்திருக்கின்றன எப்படி அவை அனைத்து மக்களும் எளிமையாக வாங்கும் வகையில் மாறி இருக்கின்றன என்பது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும் அனைத்து மக்களையும் இது சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தினார்.
பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் , ஐஆர்டிஏஐ அதிகாரிகள் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 18 சதவீத ஜிஎஸ்டி வரி விலக்கு என்பது பிரீமியம் தொகையை கணிசமான அளவு குறைக்கும். உதாரணமாக 20000 ரூபாய் பிரீமியம் கொண்ட ஒரு காப்பீடு திட்டத்தில் இதுநாள் வரை 18% ஜிஎஸ்டி சேர்த்து 23,600 ரூபாயாக செலுத்தினோம், இனி அந்த 20000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications