பெங்களூர்: மற்ற துறைகளை காட்டிலும் ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இன்றைய கால கட்டத்தில், ஐ.டி. நிறுவனங்களின் மொத்த செலவினங்களில் பணியாளர்களின் செலவு மிகப்பெரிய செலவாகும்.

இது ஐ.டி. நிறுவனங்களின் மொத்த செலவினத்தில் 50 முதல் 60 சதவீதமாக உள்ளது. இந்திய ஐ.டி. துறையின் சந்தை மதிப்பு 24,500 கோடி டாலராகும்.
சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும் உலக அளவில் தொழில்நுட்ப செலவினம் குறைந்தது போன்ற காரணங்களால் இந்திய ஐ.டி. நிறுவனங்களின் வருவாய் பாதித்துள்ளது. இதனால் இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு சென்ற ஆண்டைக் காட்டிலும் பாதியாக குறையலாம்.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஐடி துறையில் சம்பள அதிகரிப்பு சராசரியாக 12 முதல் 18 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு சம்பள உயர்வு விகிதம் 6 முதல் 10 சதவீதமாக குறையலாம் என்று கூறப்படுகிறது.
சர்வதேச ஐ.டி. நிறுவனமான Accenture இந்த மாத தொடக்கத்தில், 2023ல் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்போவதில்லை என்று தனது பணியாளர்களுக்கு இமெயில் அனுப்பியது. அதேசமயம், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் ஊதிய உயர்வு நடவடிக்கையை ஒரு காலாண்டு தாமதப்படுத்தியது. இந்த மாதம் ஊதிய உயர்வு நடவடிக்கையை செயல்படுத்துகிறது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களை தற்போதைய ஊதிய உயர்வு சுற்றில் இருந்து விலக்கியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த சிறப்பு பணியாளர் நிறுவனமான Xpheno-ன் இணை நிறுவனர் கமல் காரந்த் கூறுகையில், தற்போதைய பொருளாதார மந்தநிலை மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப செலவிடுதல் மேலும் குறைந்து விட்டால், இந்த ஆண்டு பணியாளர்களின் ஊதியம் 6 முதல் 10 சதவீதம் அதிகரிப்பு நம்பிக்கையுடன் இருக்கும். அதேசமயம், பெர்மான்ஸ் நன்றாக இருக்கும் பணியாளர்கள் கூடுதல் சம்பள உயர்வு பெறுவார்கள். ஏனென்றால் நிறுவனங்கள் செயல்திறன் மிக்கவர்கள் மீது முதலீடு செய்கின்றன என்று தெரிவித்தார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications