இந்திய ஸ்டார்ட்அப் துறையில் இருந்து பங்குச்சந்தைக்குச் சென்ற மிக முக்கியமான நிறுவனத்தில் ஒன்று பேடிஎம். கடந்த ஒரு வருடமாக ஆர்பிஐ கட்டுப்பாடுகள், வர்த்தக சரிவு, முதலீட்டாளர்களின் பங்குகள் விற்பனை, அதிகப்படியான இழப்பு என பல பிரச்சனையில் மாட்டிக்கொண்டு தவித்து வரும் பேடிஎம் பங்கு முதலீட்டாளர்களுக்கு இன்று விடிவுகாலம் பிறந்துள்ளது.
பல்வேறு நெருக்கடியில் மாட்டிக்கொண்டு தவித்து வரும் பேடிஎம் நிறுவனம் (ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்) இன்று பங்குச்சந்தையில் ஸ்டாராக ஜொலிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் பேடிஎம், பிரபல ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சாம்சங்-ன் வாலட் உடன் அமைத்த கூட்டணி தான்.

சாம்சங் வாலட் - பேடிஎம் கூட்டணி அறிவிப்பு வெளியான நிலையில் இன்று காலை பங்குச்சந்தையில் பேடிஎம் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 8% உயர்ந்து ஒரு பங்கு விலை 438.95 ரூபாயை எட்டியுள்ளது. சரி எதற்காக இந்த கூட்டணி..?
இந்த கூட்டணியின் மூலம், சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் பயனர்கள் இனி பேடிஎம் சேவைகளை எளிதாக அணுக முடியும். பேடிஎம்-ன் விமான மற்றும் பேருந்து டிக்கெட் முன்பதிவுகள் முதல் திரைப்பட டிக்கெட் வாங்குதல், ஈவென்ட் டிக்கெட் முன்பதிவுகள் வரையிலான பல்வேறு சேவைகள் இப்போது சாம்சங் வாலட் உடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய-திடம் (Irdai) பேடிஎம் பெற்றுள்ள ஜெனரல் இன்சூரன்ஸ் பதிவை விலக்கக் கோரிக்கை வைத்த நிலையில், இதை Irdai அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் இனி பேடிஎம் ஜெனரல் இன்சூரன்ஸ் திட்டத்தை உருவாக்கும் தகுதியை இழக்கிறது, அதேபோல் பிற நிறுவனங்களின் ஜெனரல் இன்சூரன்ஸ் திட்டங்களை விற்க முடியும்.
2024ஆம் ஆண்டில் ஒழுங்குமுறை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த பேடிஎம் பங்குகள், மே 9ஆம் தேதி பங்குச் சந்தையில் ரூ.310 என்ற 52 வாரக் குறைந்த அளவை எட்டிய பிறகு மீண்டும் மீண்டு வருகின்றன. ஒரு மாதத்தில் பங்கு மதிப்பு சுமார் 21% உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் 7.13 சதவீதம் உயர்ந்து 430.50 ரூபாயாக உள்ளது, இதேபோல் கடந்த 5 நாளில் 22.49 சதவீதமும், ஒரு மாதத்தில் 25.41 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து கணக்கிடும் போது பேடிஎம் பங்குகள் 33.03 சதவீத சரிவில் உள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications