தனியார் நிதித்துறையில் முன்னணி நிறுவனமான ஹெஸ்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தின் 1.01% பங்கினை, அதாவது 1.75 கோடி பங்குகளை (1,74,92,909), சீனாவின் மக்கள் வங்கி வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது மும்பை பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் ஹெஸ்டிஎஃப்சி லிமிடெட்அறிவித்துள்ளது.
தனியார் துறையினை சேர்ந்த மிகப்பெரிய கடன் வழங்குனரான ஹெஸ்டிஎஃப்சி லிமிடெட், கடந்த ஒரு மாத காலமாகவே கொரோனா வைரஸின் பரவல் காரணமாக அதன் பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
பங்கு வீழ்ச்சி
குறிப்பாக சொல்லவேண்டுமானால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதன் பங்கு விலை 25 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. இந்த நிலையில் பிஎஸ்இ- யில் ஹெச்டிஎஃப்சி லிமிடெட் பங்கு விலையானது 1,701.95 ஆக உள்ளது. கடந்த ஜனவரி 14, 2020 அன்று, ஹெச்டிஎஃப்சி லிமிடெட் பங்கு விலை 32 சதவீதம் அதிகரித்து அதன் 52 வார உச்சத்தினை 2,499.65 ரூபாயினை தொட்டது. அந்த நேரத்தில் சென்செக்ஸ் 25 சதவீதம் வீழ்ச்சியும், இதே நிஃப்டி 50யும் 26 சதவீத வீழ்ச்சியடைந்தும் காணப்பட்டது.
இவங்களும் பங்கு வைத்திருக்காங்க
இதனையடுத்தே இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பு வந்துள்ளது. ஏற்கனவே வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் 70.88 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இதில் சிங்கப்பூர் அரசு கூட 3.23 சதவீத பங்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல இடங்களில் பங்கு
சீனாவின் மக்கள் வங்கி ஏற்கனவே உலகம் முழுக்க உள்ள பல நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ள நிலையில், தற்போது இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட்டிலும் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த வங்கி குறைந்த அளவு பங்கினை ஹெச்டிஎஃப்சியில் பங்கு வைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் முதலீடு செய்துள்ளது
ஏற்கனவே பங்கு உண்டு
எனினும் இதில் எவ்வளவு தொகை, என்ன காரணம் என தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனினும் என்.டி.டிவிடம் பேசிய ஹெச்டிஎஃப்சியின் துணைத் தலைவரும் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெக்கி மிஸ்திரி PBOC ஏற்கனவே பங்கு தாரராக இருந்து வருவதாகவும், இது 2019 நிலவரப்படி நிறுவனத்தில் 0.8 சதவீதத்தை சொந்தமாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த பங்கு 1 சதவீத ஒழுங்குமுறை வரம்பைத் தாக்கியதால் இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications