தங்கத்தின் விலை உயர்வால் ஏற்கனவே விழிபிதுங்கி நிற்கும் சாமானியர்களுக்கு, பேரிடியாக வந்து விழுந்திருக்கிறது பொருளாதார நிபுணர் பீட்டர் ஷிஃபின் தங்கம் குறித்த கணிப்பு. நடுத்தர வர்க்க குடும்பங்களின் ஆகச்சிறந்த கனவாகவும், மகள்களின் திருமணத்திற்கான பெரும் நம்பிக்கையாகவும் இருப்பது தங்கம் தான். ஆனால், இன்று அந்த கனவு எட்டாக்கனியாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நேற்று வரை விலை குறையாதா என்று ஏக்கத்தோடு நகைக்கடை வாசலில் காத்திருந்தவர்களுக்கு, பீட்டர் ஷிஃப் வெளியிட்டுள்ள அந்த பகீர் கணிப்பு இடியாக இறங்கியுள்ளது. 1980-களுக்குப் பிறகு, தங்கம் தனது விஸ்வரூப வளர்ச்சியை இந்த ஏப்ரல் (2026) மாதத்தில் தான் காட்டப்போகிறது என்றும், அதன் அடுத்த இலக்கு சர்வதேச சந்தையில் 6,000 டாலர்கள் என்றும் கணித்துள்ளார்.

இந்திய மதிப்பில் கணக்கிட்டால், இது சவரன் விலையை நினைத்து பார்க்க முடியாத உச்சத்திற்கு கொண்டு செல்லும். இனி தங்கம் வாங்குவது நடுத்தர வர்க்கத்தினருக்கு வெறும் கனவு தானா? என்ற தவிப்பு ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கிறது. மொத்தத்தில் இனி தங்கம் வாங்குவது என்பது சாமானியர்களுக்கு மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறும்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 4,500 முதல் 4,800 டாலர்கள் வரையில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் பொருளாதார நிபுணரான பீட்டர் ஷிப் தனது சமூக வலைதள பக்கத்தில் தங்கம் குறித்து ஒரு முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 1980-க்கு பிறகு இந்த ஏப்ரல் மாதம் முதலீட்டாளர்களுக்கு ஒரு பொற்காலமாக அமையுமென கூறியுள்ளார். அதோடு தங்கத்தில் இலக்கு விலை குறித்து விரைவில் 5,000 டாலர் என்ற மைல்கல்லை எட்டும், அதை தொடர்ந்து 6,000 டாலர்களை எட்டலாம் என்றும் கணித்துள்ளார். அதாவது இந்திய சந்தையில் 2 லட்சத்தை வரை உயர வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளார். ஆக தங்கம் விலையானது குறைந்தால் வாங்கலாம் என காத்திருக்க வேண்டாம். இன்றே வாங்குங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதமானது, தங்கம் விலை கடந்த 2008 க்கு பிறகு கண்ட மோசமான சரிவை கண்ட ஒரு மாதம் என்பதை கூறும் ஷிப், ஆனால் தற்போது அதிலிருந்து மீண்டு வரும் வேகம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பொதுவாக மிகப்பெரிய சரிவு என்பது இருந்தால், அதைத் தொடர்ந்து சந்தை சிறிது ஏற்றம் காணும். ஆனால் தற்போதைய நிகழ்வு அப்படியல்ல. தற்போது அனைத்து எல்லைகளை உடைத்துக் கொண்டு சென்று கொண்டுள்ளது. இது மேலும் முன்னோக்கி செல்வதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
தற்போதைய நெருக்கடியான சூழலில் பலரும் டாலரை விட தங்கத்தையே சிறந்த முதலீடாக பார்க்கின்றனர். நீண்ட கால போர் சூழல், அதிகரித்து வரும் பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை என அனைத்தும் பங்குச் சந்தையை பாதிக்கும். ஆனால் தங்கம் ஏற்றம் காணலாம். சொல்லப்போனால் காகித பணத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வரும் நிலையில், தங்கம் போன்ற பாதுகாப்பான கருவியை முக்கியமான ஒன்றாக முதலீட்டாளர்கள் பார்க்க தொடங்கி விட்டனர். இது நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாகவும் அமையலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?



Click it and Unblock the Notifications
