மும்பை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா ரூ.2 குறைத்து எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனங்கள் சிஎன்ஜி விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.2.5 குறைத்துள்ளதோடு, மத்திய அரசும் எல்பிஜி விலையை சிலிண்டருக்கு ரூ.100 என குறைத்துள்ளது.
பெட்ரோல் , டீசல் விலை குறைப்புக்கு பின்னர், (மார்ச் 15இல்) எண்ணெய் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சராசரியாக 6% வரை குறைந்தன. IOCL பங்கு 5.49% வரை குறைந்து ரூ.161க்கும், BPCL பங்கு 3.66% வரை குறைந்து ரூ.586.45க்கும், HPCL பங்கு 6.25% வரை குறைந்து ரூ.468.85க்கு வர்த்தகமானது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, எண்ணெய் நிறுவனங்களின் நிகர லாபம் விகிதங்களை பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எண்ணெய் நிறுவனங்களின் லாப அளவுகள் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.2.20 அளவிலும், பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.3.5 அளவிலும் குறையும் என எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த விலை குறைப்பு அடுத்த இரண்டு முதல் இரண்டரை மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் பொது தேர்தல்கள் முடிந்ததும் இயல்பான நிலைக்கு திரும்பும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விலை மாற்றத்திற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு முக்கிய பங்காற்றும்.
தற்போதைய எரிபொருள் விலைக் குறைப்பானது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் நடப்பு நிதியாண்டு வருவாய் மதிப்பீடுகளை பாதிக்காது என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த நிதியாண்டில் கடைசி இரண்டு வாரங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 1.6 மற்றும் 1.7 ஆக குறைந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 பிரிண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 85 டாலராக குறைந்து தற்போது இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது தொடர்பான நமது ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை நாங்கள் பராமரிக்கிறோம் என எம்கி குளோபல் தெரிவித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் வளர்ச்சி அடையும் என்ற நிலையில் இருந்து மாறப்போவதில்லை என கூறியுள்ளனர்.
மதிப்பீடுகள் என்ற அடிப்படையில் பார்த்தால், கடந்த 4-5 மாதங்களாக வலுவான ஏற்றம் அடைந்து வந்த எண்ணெய் நிறுவன பங்குகள், பிரைஸ் டூ புக் மதிப்பீடுகளை விட 15-25% பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்படுகின்றன என ஜே.எம். பைனான்சியல் நிறுவனம் கூறியுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோல் கார்ப்பரேஷன் பங்குகள் (HPCL) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்குகள் (IOCL) சராசரியான 1.0 x-ஐ விட தற்போது 1.4 x என வர்த்தகமாகிறது என ஜே.எம். பைனான்சியல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதே போல பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) பங்குகள், சராசரியை விட 1.6 x என வர்த்தகமாகிறது.
எனவே ஜே.எம். பைனான்சியல் நிறுவனம் IOCL மற்றும் HPCL பங்குகளுக்கு விற்பனை செய்யலாம் என்ற மதிப்பீட்டை தந்துள்ளது. அதே வேளையில் BPCL பங்கினை வைத்துக் கொள்ளலாம் என மதிப்பீடு தந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications