பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும்.. மோடி அரசு என்ன செய்யப்போகிறது..!

இந்திய மக்களுக்குப் பெரும் சுமையாக இருந்த பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பெரிய அளவில் குறைத்தது, மத்திய அரசுக்கு இணையாகப் பல மாநிலங்கள் எரிபொருள் மீது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரியும் குறைத்து அதிகளவிலான விலை குறைப்பு பதிவாகியுள்ளது. மத்திய மாநில அரசின் விலை குறைப்பு மூலம் பெட்ரோல், டீசல் விலை பல மாத சரிவு பதிவாகியுள்ளது.

ஆனால் இந்த விலை குறைப்பு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றும், விரைவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர உள்ளதாக எனர்ஜி துறை வல்லுனர் நரேந்திர தனேஜா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு என்ன செய்யப்போகிறது.

 தேர்தலுக்கு முன் பின்

தேர்தலுக்கு முன் பின்

பொதுவாக மத்திய அரசு தேர்தலுக்கு முன்பு தான் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வைத்திருந்தது தேர்தல் முடிந்த பின்பு தாறுமாறாக விலையை உயர்த்தும், ஆனால் சமீபத்தில் நடந்தது 3 மாநில இடைத்தேர்தல் என்பதால் விலை உயர்வில் எவ்விதமான கட்டுப்பாடுமின்றி உயர்ந்து வந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு பிஜேபி தலைமையிலான மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகளவிலான பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்தது.

 நரேந்திர தனேஜா

நரேந்திர தனேஜா

ஆனால் இனி வரும் நாட்களிலும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் என நரேந்திர தனேஜா கூறுகிறார்.

 கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இந்தியாவில் கச்சா எண்ணெய் என்பது அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் மிக முக்கியமான எரிபொருள். இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 86 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறோம். இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை நம்பிதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதிகாரம்

அதிகாரம்

இதனால் இந்திய அரசிடம் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இல்லை, வரியைக் குறைப்பதன் மூலம் விலையை குறைக்கலாம், அல்லது அரசு நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு ரீடைல் விற்பனையை குறைக்கலாம். ஆனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தான் விலை நிர்ணயம் செய்யப்படும் என எனர்ஜி துறை வல்லுனர் நரேந்திர தனேஜா கூறுகிறார்.

 

 கொரோனா தொற்று

கொரோனா தொற்று

கொரோனா தொற்றுக்குப் பின்பு தான் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரத் துவங்கியது. இந்த விலை உயர்வுக்கு அடிப்படையாகச் சப்ளை டிமாண்ட் பிரச்சனை உள்ளது.

 சப்ளை டிமாண்ட் பிரச்சனை

சப்ளை டிமாண்ட் பிரச்சனை

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது உலக நாடுகள் லாக்டவுனில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியும், விநியோகமும் பெரிய அளவில் இருந்தது, ஆனால் தற்போது அனைத்து நாடுகளும் முழுமையாக இயங்க துவங்கிய வேளையில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது.

 OPEC+ நாடுகள்

OPEC+ நாடுகள்

OPEC+ நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்து முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும். மேலும் 2023க்குள் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கட்டாயம் 100 டாலரைத் தொடும் என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை.

 மோடி அரசு

மோடி அரசு

இந்நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு என்ன செய்யப்போகிறது பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் 0 சதவீத வரியை விதிக்குமா..? பெட்ரோல், டீசலுக்குக் காங்கிரஸ் அரசு போல் எவ்விதமான மானியத்தையும் எண்ணெய் பத்திரங்களையும் கொடுக்கக் கூடாது என்பதில் பிஜேபி அரசு உறுதியாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+