டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எந்த அளவுக்கு நன்மையை செய்துள்ளதோ, அதே அளவு இவற்றோடு தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்து விட்டன. OTP மோசடிகள், பிஷிங் லிங்குகளை பயன்படுத்தி மோசடி என மோசடிக்கு பெயர் வைக்க முடியாத அளவிற்கு பல்வேறு மெத்தடுகளையும் பயன்படுத்துகின்றனர். இதை நம்பி மக்களும் பல ஆயிரம் லட்சங்களை இழந்து தங்கள் பணத்தை மீட்க போராடி வருகின்றனர்.
காவல்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்தாலும் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு உதாரணமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.14.5 லட்சத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் மருந்து நிறுவன இயக்குனரிடம் 600 சதவீதம் லாபம் தருவதாக கூறி மோசடிக்காரர்கள் ரூ.14.5 லட்சத்தை அபகரித்துள்ளனர்.
எப்படி நடந்தது?: மோசடிக்காரர்கள் ஆரம்பத்தில் வாட்சப் மூலம் அவரை தொடர்பு கொண்டு அவரது முதலீட்டுக்கு 600 சதவீதம் வரை வருமானம் தருவதாக உறுதியளித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் வாட்சப்பில் அவருக்கு இது தொடர்பாக ஒரு செய்தி வந்துள்ளது. அதில் அதிக லாபம் தருவது குறித்து உறுதி அளித்துள்ளனர். பின்னர் "அப்சல்யூட் புரோக்கரேஜ் 878" என்ற வாட்சப் குரூப்பில் அவரை சேர்த்துள்ளனர். அது மட்டுமின்றி தங்களுடைய ஆன்லைன் வர்த்தக அப்ளிகேஷனில் அவரை முதலீடு செய்யும்படியும் கூறியுள்ளனர். 10 ஆண்டுகளாக செபியில் பதிவு செய்து இயங்கி வருவதாக மோசடி செய்தவர்கள் அவரிடம் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் ஏமாற்றப்பட்டவருக்கு 1,000 ரூபாய் கிடைத்தது. இவர் குறைந்த விலையில் பங்குகளை வாங்கும் வர்த்தகத்தில் முதலீடு செய்ய வைக்கப்பட்டார். பின்னர் அவர் வெவ்வேறு தேதிகளில் ரூ.14.48 லட்சத்தை டெபாசிட் செய்தார்.
மோசடிக்காரர்களின் பொதுவான யுக்தி என்னவென்றால் அவர்கள் உருவாக்கிய அப்ளிகேஷனில் ஏமாற்றப்படுபவர்களுக்கு அதிக லாபம் பெற்றது போல காண்பிப்பது தான். இந்த மோசடியிலும் அதே தான் நடந்துள்ளது. ஆனால் லாபத்தை திரும்ப பெற இந்த நபர் முயன்ற போது ஒரு மாத லாக்கின் காலம் முடிந்த பிறகு பணத்தை எடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
லாக்கின் காலம் முடிந்த பிறகும் இவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அருகில் உள்ள சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இன்றைய உலகில் வெகு சீக்கிரம் லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கோடு மக்கள் யார் என்றே தெரியாத நபர்களிடம் முதலீடு செய்து ஏமாறுகின்றனர். இந்த போக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
600 சதவீதம், 700 சதவீதம் லாபம் தரக்கூடிய முதலீட்டுக்கெல்லாம் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய விகிதத்தில் வருமானம் கிடைக்கும் என்று சொன்னால் அதில் இறங்குவதற்கு முன்பு சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications