தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வது என்பது ஒரு சிறப்பான முதலீடு என்பதும் அவசரத்திற்கு பணமாக மாற்றும் ஒரு முதலீடு என்பதும் தெரிந்ததே.
எனவே தான் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீபாவளி நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ள நிலையில் மேலும் சலுகை விலையில் தங்கம் வாங்க போன்பே தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்.
போன்பே சலுகை
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Dhanteras நிறுவனத்துடன் போன்பே நிறுவனம் இணைந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதில் சில சலுகைகளை அறிவித்துள்ளது. போன்பே வாடிக்கையாளர்கள் Dhanteras நிறுவனத்தின் சலுகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தங்கம் மீது ரூபாய் 2500 வரையிலும் வெள்ளி மீது ரூ.500 வரையிலும் கேஷ்பேக் சலுகையை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சலுகை யாருக்கு பொருந்தும்?
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை தங்கம் மற்றும் வெள்ளி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். டிஜிட்டல் நாணயங்கள் அல்லது தங்க கட்டிகள் ஆகியவற்றை வாங்குவதற்காக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகைக்கு தகுதியானவர்கள். தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கு Dhanteras நிறுவனம் இந்த நல்ல சலுகையை போன்பே பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது. ரூபாய் 1000 அல்லது அதற்கு மேல் தங்கம் மற்றும் வெள்ளியை போன்பே செயலி மூலம் வாங்குபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
24 காரட் தங்கம்
போன்பே செயலி மூலம் வாடிக்கையாளர்கள் 99.99 சதவீதம் தூய்மையான தங்கமான 24 காரட் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கி கொள்ளலாம். மேலும் உயர்தர தங்கம் மற்றும் தங்க, வெள்ளி நாணயங்கள், தங்க கட்டிகள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பர்சேஸ் செய்தால் நேரடி டெலிவரி செய்யும் வசதியும் உண்டு.
டிஜிட்டல் தங்கம்
போன்பே செயலி மூலம் நாம் வாங்கும் 24 காரட் தங்கம் டிஜிட்டல் முறையிலும் வாங்கப்படும். இந்த தங்கத்தை வாங்குவதற்கு எந்தவிதமான கூடுதல் செலவுகள் இல்லை என்பதும் குறிப்பாக செய்கூலி, சேதாரம் ஆகியவை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நாம் முதலீடு செய்யும் தங்கம் இலவச மற்றும் காப்பீடு செய்யப்பட்ட வங்கி லாக்கரில் சேமிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications