கோல்ட் Vs கோல்ட் ETF.. 5 ஆண்டுகளில் எதற்கு அதிக வருமானம் தெரியுமா?

சமீபகாலமாக முதலீட்டாளர்கள் தங்களுடைய நிதியை வளர்க்க தங்கத்தை போலவே இருக்கும் பல்வேறு முதலீட்டு விருப்பங்களை ஆராய்கின்றனர். அப்படி சிலர் தங்க பத்திரங்கள், ETF-கள், கோல்டு ஃபண்டுகள், டிஜிட்டல் கோல்டு மற்றும் தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றனர். அதிலும் குறிப்பாக சிலர் தங்கம் மற்றும் ETF-களில் அதிக முதலீடு செய்கின்றனர். இந்தப் பதிவில் தங்கம் மற்றும் ETF-களில் முதலீடு செய்யும் போது 5, 10 மற்றும் 15 வருடங்களில் எதற்கு அதிக லாபம் கிடைக்கும்? என்பது குறித்து பார்ப்போம்.

தங்க முதலீடு:

5 ஆண்டுக்கான லாபம்: கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. டிசம்பர் 24, 2019 அன்று 10 கிராம் தங்கம் 31,500-ஆக இருந்தது. டிசம்பர் 24,2024 அன்று 10 கிராம் தங்கம் 78,500 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதாவது தோராயமாக 20 சதவீத வளர்ச்சியை குறிக்கிறது.

 கோல்ட் Vs கோல்ட் ETF.. 5 ஆண்டுகளில் எதற்கு அதிக வருமானம் தெரியுமா?

10 ஆண்டுக்கான லாபம்: அதேபோல டிசம்பர் 24,2014 அன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 25,570 ரூபாயாக இருந்தது. ஆனால் டிசம்பர் 24, 2024 நிலவரப்படி தங்கத்தின் விலை 78,500 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது 12 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சியில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

15 ஆண்டுக்கான லாபம்: டிசம்பர் 24,2009-ஆம் ஆண்டு 10 கிராம் தங்கம் விலை ரூ.16,500-ஆக இருந்தது. ஆனால் டிசம்பர் 24, 2024-ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை ரூ.70,900-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15 வருடங்களில் தங்கத்தின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

5 ஆண்டுக்கான வருமானம்: எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் கோல்டு ETF, ஆக்சிஸ் கோல்ட் ஃபண்ட், இன்வெஸ்கோ இந்தியா கோல்ட் இந்தியா, SBI கோல்ட் ஃபண்ட் மற்றும் ஆதித்யா பிர்லா சன் லைஃப் கோல்ட் ETF ஆகியவை கடந்த 5 ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் சிறந்த செயல்திறனை அளித்துள்ளது. இந்த 5 ETF-களும் சுமார் 13.8% முதல் 14.07 சதவீதம் வரையிலான வருமானத்தை வழங்கியுள்ளன.

10 ஆண்டுக்கான வருமானம்: 10 ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் கோல்ட் ETF, SBI கோல்டு ஃபண்ட், கோடக் கோல்ட் ஃபண்ட், ஆதித்யா பிர்லா சன் லைஃப் கோல்ட் ETF மற்றும் இன்வெஸ்கோ இந்தியா கோல்ட் ETF ஆகியவை அதிக வருமானம் வழங்கிய முதல் 5 ஃபண்டுகளில் இடம்பெற்றுள்ளன. இந்த ஃபண்டுகள் கடந்த 10 ஆண்டுகளில் 10.02 சதவீதம் முதல் 10.28 சதவீதம் வரை வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளன.

15 ஆண்டுக்கான வருமானம்: யுடிஐ கோல்டு ஃபண்ட், எஸ்பிஐ கோல்டு ETF, கோடக் கோல்ட் ETF, குவாண்டம் கோல்ட் ETF மற்றும் நிப்பான் இந்தியா ETF கோல்ட் பீஸ் ஆகியவை கடந்த 15 ஆண்டுகளில் 9.54% முதல் 9.62% வரை வருமானத்தை வழங்கியுள்ளன.

தங்கத்தின் வருமானம் மற்றும் கோல்ட் ETF-களின் வருமானத்தை பார்க்கும்போது கடந்த 5 ஆண்டுகளில் தங்கம் 20% வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளது. ஆனால் ETF-கள் 13.8% முதல் 14.07 சதவீதம் வரை வருமானம் அளித்துள்ளன. 10 ஆண்டுகளில் பார்க்கும்போது தங்கம் 12 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளது. ETF-கள் 10.02 சதவீதம் முதல் 10.28 சதவீதம் வரை வருமானம் வழங்கியுள்ளன. 15 ஆண்டுகளில் தங்கம் 11 சதவீத வருமானத்தையும், ETF-கள் 9.54 சதவீதம் முதல் 9.62 சதவீதம் வருமானத்தை வழங்கியுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+