ஆதார் இல்லாவிட்டால் ஜிஎஸ்டி பதிவுக்கு பிசிகல் வெரிபிகேஷன் கட்டாயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதார் இல்லாமல் ஜிஎஸ்டி பதிவு செய்யும் தொழில் நிறுவனங்கள் கட்டாயம், நேரில் சென்று முகவரி உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்.

 

இது குறித்த மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜிஎஸ்டி பதிவு விண்ணப்பத்தில் ஆதார் விவரங்களை தெரிவிக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கும் போது அங்கீகரிக்கப்படும்.

எனினும் விண்ணப்பத்தில் ஆதார் விவரங்களை கொடுக்காத நபர்களின், தொழில் நிறுவனங்களின் ஆவணங்களை நேரில் சரி பார்த்த பிறகே ஜிஎஸ்டி பதிவு அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு எத்தனை நாட்களில்?

பதிவு எத்தனை நாட்களில்?

ஆதார் விவரங்களை தெரிவுசெய்துவிட்டால் மூன்று நாட்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு அங்கீகரிக்கப்படும். ஆனால், ஆதார் விவரங்களை தெரிவிக்காமல், தொழில் நிறுவனத்தின் வளாகத்தை நேரில் ஆய்வுசெய்து சரிபார்த்தபின்னர் ஜிஎஸ்டி பதிவு கிடைக்க 21 நாட்கள் வரை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய செயல்முறை பரிந்துரை

புதிய செயல்முறை பரிந்துரை

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் ஆன்லைன் பதிவில், லைவ் போட்டோ மற்றும் பயோமெட்ரிக் மூலமாக வாடிக்கையாளரின் இன்வாய்ஸ்களைச் சரிபார்க்கும் முறையைக் கட்டாயமாக்க ஜிஎஸ்டி சட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய மற்றும் மாநில வரித்துறை அதிகாரிகள் இந்த சரிபார்ப்பு நடைமுறையைக் கடைபிடிக்க முன்னதாக வலியுறுத்தினர். ஏனெனில், போலியான ரசீதுகளைத் தயாரித்து உள்ளீட்டு வரிக் கடன் சலுகைகளைப் பெற நிறுவனங்கள் பல முயற்சிப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக போலியான நிறுவனங்கள் பெயரில் இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்து நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆக இந்த பரிந்துரையை செயல்படுத்துமாறும் கடந்த வாரத்தில் வெளியான செய்திகள் வெளியானது.

மோசடி நடக்காமல் இருக்க
 

மோசடி நடக்காமல் இருக்க

ஜிஎஸ்டி பதிவு நடைமுறையில் ஆதார் சரிபார்ப்பு இருக்கும் பட்சத்தில் இதுபோல வாடிக்கையாளரின் புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜிஎஸ்டி பதிவில் ஆதார் சரிபார்ப்பு இல்லாவிட்டால் வாடிக்கையாளரை நேரடியாகச் சென்று ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கூடுதலாகக் கண்காணித்து, மோசடிகள் நடைபெறாமல் தடுக்க இக்குழு பரிந்துரை செய்தது.

ஜிஎஸ்டி போலி விலை பட்டியல்

ஜிஎஸ்டி போலி விலை பட்டியல்

இதற்கிடையில் போலி விலை பட்டியல் மற்றும் சம்பந்தபட்ட மோசடிகள், ஆகியவை ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது. நவம்பரில் தொடங்கிய இந்த இயக்கத்தில் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் மற்றும் வரி அதிகாரிகள் இதுவரை, 92 பேரை போலி விலைப்பட்டியல் மூலம் தகுதியற்ற உள்ளீட்டு வரிக் கடனை பெறுவதற்காக அல்லது அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல் 3,161 போலி நிறுவனங்களுக்கு எதிரான 994 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Physical verification compulsory for Goods and service tax registration without aadhaar details

GST updates.. Physical verification compulsory for Goods and service tax registration without aadhaar
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X