உலகளவில் மக்கள் மத்தியில் நுகர்வு பழக்கம் பெரிய அளவில் மாறி வருகிறது, ஒரு காலத்தில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வந்த கூட்டம், இன்று வீட்டிலேயே ஆர்டர் செய்து ஏசியுடன் ஹோம் தியேட்டரில் புதிய சினிமாவை ரசிக்க துவங்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் கடைக்கு வந்து பொருட்களை வாங்குவதும், நுகர்வதும் குறைந்துள்ளது. இந்த பாதிப்பு பீட்சா ஹட்-ஐ பாதித்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல உணவு நிறுவனமான யம் பிராண்ட்ஸ் கீழ் இயக்கும், பீட்சா ஹட் பிராண்டு வர்த்தகத்தை என்ன செய்வது என ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்க அதன் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

உலக அளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 20,000 கடைகளை கொண்ட பீட்சா ஹட், அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களின் போட்டியின் காரணமாகவும், மக்களின் விருப்பம் மாறியதன் காரணமாக அதன் வர்த்தகம் தடுமாறுகிறது. இதனால் பீட்சா ஹட் நிறுவனத்தின் வர்த்தகத்தை விற்பனை செய்யும் ஆய்வில் யம் பிராண்ட்ஸ் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவில் Denny's பிரண்ட் கையமாறியது, இதன் தொடர்ச்சியாக யம் பிராண்ட்ஸ் பீட்சா ஹட் வர்த்தகத்தை விற்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியான நிலையில் அமெரிக்க வர்த்தகத்தில் யம் பிராண்ட்ஸ் பங்குகள் 7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இந்தியாவில் பீட்சா ஹட் வர்த்தகத்தை தேவயாணி இண்டர்நேஷ்னல் நிறுவனம் நிர்வாகம் செய்து வருகிறது. இன்று பங்குச்சந்தை விடுமுறை என்பதால் இந்நிறுவனத்தின் இன்றைய பங்கு மதிப்பை பார்க்கமுடியாது. ஆனால் நேற்றைய வர்த்தகத்தில் 0.97 சதவீதமும், 5 நாளில் 5.16 சதவீதமும், 1 மாதத்தில் 3 சதவீதமும், 6 மாதத்தில் 10.25 சதவீதமும், 2025ஆம் ஆண்டில் 12.52 சதவீதம் சரிந்து காணப்படுகிறது.
Yum Brands வெளியிட்டுள்ள தகவல்படி பீட்சா ஹட் உலகளாவிய அளவில் வலுவான நிலையில் உள்ளது. இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சர்வதேச விற்பனை 2 சதவீதம் உயர்ந்தது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா அதன் இரண்டாவது பெரிய சந்தையாக. உலக அளவில் பல சந்தைகளில் வலுவான வளர்ச்சி காணப்படுகிறது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தக அடித்தளம் சிறப்பாக இருந்தாலும், அமெரிக்க வர்த்தகத்தில் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது.
பீட்சா ஹட் விற்பனையில் பாதி அமெரிக்காவில் இருந்து வருகிறது, அமெரிக்காவில் மட்டும் சுமார் 6,500 கடைகள் உள்ளன. ஆனால் அமெரிக்க விற்பனை 7 சதவீதம் குறைந்தது. அமெரிக்க மக்கள் தற்போது விரைவான பிக்அப் மற்றும் ஹோம் டெலிவரி சேவையை அதிகம் விரும்பும் நிலையில் பீட்சா ஹட் பெரிய உணவங்களையும், டைனின் சேவைகளை மட்டுமே நம்பி வர்த்தகம் செய்கிறது. இதனால் பீட்சா ஹட் வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
யம் பிராண்ட்ஸ் CEO கிறிஸ் டர்னர் இதுக்குறித்து கூறுகையில், "பீட்சா ஹட் உலகளாவிய அடித்தளம் மற்றும் பல சந்தைகளில் வலுவான வளர்ச்சி கொண்டுள்ளது. ஆனால், அதன் செயல்திறனில் கூடுதல் நடவடிக்கை தேவை எனக் காட்டுகிறது. இதை யம் பிராண்ட்ஸுக்கு வெளியே சிறப்பாக செயல்படுத்தலாம் என நினைக்கிறேன். எனவே, பிராண்டின் முழு மதிப்பை பெற புதிய உத்தி, புதிய விருப்பங்களை முழுமையாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம்." என தெரிவித்தார்
பீட்சா ஹட்-ன் வீழ்ச்சி 2020இல் துவங்கியது, இப்போது பீட்சா ஹட்-ன் ஒரு பெரிய ஃபிரான்சைஸி திவாலானது, இதனால் 300 கடைகள் மூடப்பட்டன. அமெரிக்க பீட்சா சந்தையில் பீட்சா ஹட் பங்கு 2019இல் 19.4 சதவீதத்தில் இருந்து தற்போது 15.5 சதவீதமாக குறைந்ததுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தான் பீட்சா ஹட் வர்த்தகத்தை குறைந்தபட்சம் அமெரிக்க வர்த்தகத்தை கைமாற்றிவிட திட்டமிடுகிறது யம் பிராண்ட்ஸ். யம் பிராண்ட்ஸ் நிறுவனம் பீட்சா ஹட் மட்டும் அல்லாமல் KFC, டாகோ பெல், Habit Burger & Grill ஆகிய பிராண்டுகளையும் வைத்து உலகளவில் நிர்வாகம் செய்து வருகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications