உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வரலாறு காணாத சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், தங்கமும் வெள்ளியும் தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சமீப காலமாக இந்த 2 உலோகங்களின் விலைகளும் புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், இதில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர்.
இருப்பினும், பலருக்கு ஆபரணத் தங்கம், நாணயங்கள் அல்லது ETF போன்ற முதலீடுகளில் எதை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுகிறது. எனவே, எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உலகளவில் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்து தங்கம் விலையை இருமடங்காகியுள்ளது. தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் 2023 அக்டோபரில் 1,900 அமெரிக்க டாலராக இருந்த தங்கத்தின் விலை, தற்போது 3,860 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 45% வளர்ச்சியும், இந்த ஆண்டில் 47% வளர்ச்சியையும் தங்கம் பதிவு செய்துள்ளது.
இந்தச் சூழலில், தங்கத்திலும் வெள்ளியிலும் புதிதாக முதலீடு செய்ய இருப்பவர்கள், நகைகளை வாங்குவதா அல்லது தங்க மற்றும் வெள்ளி ஈ.டி.எஃப் (ETF) போன்ற முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதி ஆலோசகர் அகில் ரதி பேசுகையில், "உங்கள் முதலீட்டின் நோக்கம் என்ன என்பதே இங்கு முக்கியம். உங்கள் முதலீட்டின் நோக்கம் தனிப்பட்ட பயன்பாடு அல்லது கலாச்சார முக்கியத்துவம் என்றால், நாணயங்கள் அல்லது நகைகள் பொருத்தமானவை. ஆனால், 4 முதல் 5 ஆண்டு காலத்திற்குள் உங்கள் செல்வத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், நகைகளையோ அல்லது நாணயங்களோ வாங்கக் கூடாது. ஏனெனில், அதை வாங்கும் போது 3% ஜிஎஸ்டி, சேதாரம் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் போன்ற கூடுதல் செலவுகள் உள்ளன.
எனவே, செல்வத்தை உருவாக்குவதை இலக்காக கொண்ட முதலீட்டாளர்களுக்கு, ஈ.டி.எஃப் (Exchange-Traded Funds) முறையே மிகவும் ஏற்ற வழிமுறை ஆகும். தங்க ஈ.டி.எஃப்-களின் நிர்வாக செலவு சுமார் 0.8% மட்டுமே இருக்கும். தூய்மை, பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்த கவலைகள் தேவையில்லை. கடந்த 2023 ஆகஸ்ட் முதல் 2025 ஆகஸ்ட் வரை இந்திய தங்க ஈ.டி.எஃப்-களில் நிகர வரத்து 108% அதிகரித்துள்ளது.
தங்க ஈ.டி.எஃப்-களை ஒரு கிராம் அளவுக்கு கூட டிமாட் கணக்கு மூலம் வாங்கிக் கொள்ள முடியும். உங்களுக்கு டிமாட் கணக்கு இல்லையென்றால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் Gold Fund of Funds - FoFs திட்டங்களில் கூட முதலீடு செய்யலாம். அதேபோல், சந்தையின் ஏற்ற இறக்கங்களை குறைக்க, ஒரே நேரத்தில் பெரிய அளவில் தங்கம் வாங்கக் கூடாது. படிப்படியாக சேர்த்து தேவைப்படும் போது விற்கலாம்.
More From GoodReturns

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications