தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் வேளையில் மக்கள் பிளாட்டினம் பக்கம் திரும்பத் துவங்கியுள்ளது, கடந்த 2 மாதத்தில் தெளிவாகத் தெரிகிறது. அதிலும் இன்றைய விலை உயர்வு பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு இந்த விலை உயர்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் தங்கம் விலையும், வெள்ளி விலையும் ஒன்றாக இருந்தது. இதேபோல் தங்கத்தைப் போலவே வெள்ளிக்கும் சிறப்பான ரீசேல் வேல்யூ இருப்பதாகக் கூறினாலும் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகவில்லை என்றாலும் சிறிய அளவிலான வர்த்தகம் பிளாட்டினம் வைத்துக்கொண்டு இருந்தது.

இந்த நிலையில் தங்கம் வலை ஒரு பவுன் 50000 ரூபாயை நெருங்கிய வேளையில் பிளாட்டினம் விலை வெறும் 20000 ரூபாயாக இருந்த நிலையில் இளம் தலைமுறையினர் பிளாட்டினத்தை வாங்க துவங்கினர். இதன் வாயிலாக மார்ச் மாதத்தில் மட்டும் பிளாட்டினம் விலை 4 சதவீதம் உயர்ந்தது, ஏப்ரல் மாதம் 2442 ரூபாயில் இருந்து 2606 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் 10 கிராம் பிளாட்டினம் விலை 1200 ரூபாய் உயர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,060 ரூபாய், மும்பை - 26,060 ரூபாய், டெல்லி - 26,060 ரூபாய், கொல்கத்தா - 26,060 ரூபாய், பெங்களூர் - 26,060 ரூபாய், ஹைதராபாத் - 26,060 ரூபாய், கேரளா - 26,060 ரூபாய், அகமதாபாத் - 26,060 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,060 ரூபாய், லக்னோ - 26,060 ரூபாய், கோயம்புத்தூர் - 26,060 ரூபாய், மதுரை - 26,060 ரூபாயாக உள்ளது.
பிளாட்டினம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மிகவும் விலை உயர்ந்த நகைகள் தான். ஆனால், பிளாட்டினம் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாடு பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்வது அவசியம். பிளாட்டினம் உலகளவில் எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது? அதில் எவ்வளவு சதவீதம் நகைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
தென்னாப்பிரிக்கா தான் உலகிலேயே மிகப்பெரிய பிளாட்டினம் உற்பத்தியாளராக உள்ளது. உலக பிளாட்டினம் உற்பத்தியில் சுமார் 70% தென்னாப்பிரிக்காவிலிருந்தே கிடைக்கிறது.ரஷ்யா உலகின் இரண்டாவது பெரிய பிளாட்டினம் உற்பத்தியாளராக உள்ளது, மொத்த உற்பத்தியில் சுமார் 12% பங்களிப்பு செய்கிறது. இதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே மற்றும் கனடா ஆகிய நாடுகளும் குறைந்த அளவிலான பிளாட்டினத்தை உற்பத்தி செய்கின்றன.
உலகளவில் மொத்த பிளாட்டினம் உற்பத்தியில் சுமார் 30% முதல் 40% வரை நகைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவில் நகைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், நகைத் துறையில் பிளாட்டினம் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மேற்கத்திய நாடுகளில், பிளாட்டினம் திருமண மோதிரங்கள் மற்றும் பிற நுணுக்கமான நகைகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிளாட்டினம் நகைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்து பலரிடம் நிலவி வருகிறது. உண்மையில், பிளாட்டினம் பல்வேறு தொழில்துறைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிளாட்டினத்தின் உருகும் வெப்பநிலை மிகவும் அதிகம். இதன் காரணமாக, உயர் வெப்பநிலையில் இயங்கும் இயந்திரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.
கார் எரிபொருட்களில் உள்ள கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளை குறைக்கப் பிளாட்டினம் கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர்களில் (Catalytic Converters) பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் காற்று மாசு குறைக்கப்படுகிறது.
மருத்துவத் துறை, கெமிக்கல், பல் மருத்துவம், கண்ணாடி தொழில், மின்சார தொழில், ஆட்டோமொபைல் எனப் பல துறையில் பிளாட்டினம் உலோகம் முக்கிய இணை, வேதி பொருளாகப் பயன்படுத்தப்பட உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!



Click it and Unblock the Notifications