எல்லோரும் தங்கம், வெள்ளி பற்றியே பேசிக்கொண்டு இருக்கும் நிலையில் பலரும் மறந்துபோன ஒரு உலோகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து சாமானிய மக்களுக்கு மட்டும் அல்லாமல் பெரும் முதலீட்டாளர்களுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளது. தற்போது விஷயம் என்னவென்றால் தங்கம், வெள்ளி-க்கு இருக்கும் அனைத்து சாதக பாதகங்களும் இந்த உலோகத்திற்கும் உள்ளது என்பது தான். இதனால் 2026ஆம் ஆண்டிலும் இதன் விலை தொடர்ந்து உயர 10க்கு 10 பொருத்தம் பக்காவாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு கமாடிட்டி சந்தையில் பெரிய ஆச்சரியத்தை தந்துள்ள ஒரு உலோகம் என்றால் அது பிளாட்டினம் தான். இந்த ஆண்டு தங்கம், வெள்ளி ராக்கெட் வேகத்தில் உயர்ந்த போல் பிளாட்டினம் அதைவிட அதிகமாக உயர்ந்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் பிளாட்டினம் விலை 1000 டாலருக்கு கீழ் இருந்த விலை இப்போது 2300 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இது சுமார் 140 முதல் 150 சதவீத உயர்வு. 1987க்குப் பிறகு இது மிகப்பெரிய வருடாந்திர லாபத்தை பிளாட்டினம் பதிவு செய்துள்ளது. பிளாட்டினம் கடந்த 10 வர்த்தக நாளில் தொடர்ச்சியார உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் பிளாட்டினம் விலை 24,910 ரூபாய் அளவில் இருந்து இன்று ஒரு நாளில் மட்டும் 4560 ரூபாய் உயர்ந்து 67,410 ரூபாயாக உள்ளது. இந்திய ரீடைல் சந்தை விலை உயர்வை கணக்கிட்டால் 170.61% உயர்வாகும்.
தங்கம், வெள்ளியை போல் பிளாட்டினமும் சந்தையில் தொடர்ச்சியான விநியோக பற்றாக்குறை எதிர்கொண்டு வருகிறது. உலகளவில் பெரும்பாலான பிளாட்டினம் உற்பத்தி தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. தற்போது இதன் உற்பத்தியில் பல சவால்களும், சிக்கல்களும் இருக்கும் காரணத்தால் சந்தையில் உருவாகியுள்ளி டிமாண்ட்-ஐ உற்பத்தி அளவு பூர்த்தி செய்ய முடியவில்லை, இதனால் பிளாட்டினம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன.
மறுமுனையில் பிளாட்டினம் முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய விருப்பமாக மாறியுள்ளது. உலோகத்தில் டைவர்சிஃபிகேஷன் தேடும் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளிக்கு மாற்றாக பிளாட்டினத்தை பார்க்கிறார்கள். இதனால் பிளாட்டினம் இணைப்பு ETFகளில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பிளாட்டினத்தை உலோகமாகவும் வாங்கும் அளவும் உயர்ந்துள்ளது.

வெள்ளியை போல் பிளாட்டினம் உலோகத்திற்கும் தொழில்துறை பயன்பாடு அதிகம். ஆட்டோமொபைல் துறையில் கேடலிடிக் கன்வெர்ட்டர்கள், தொழிற்சாலை பயன்பாடு, ஹைட்ரஜன் ஃப்யூல் செல் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முக்கியமானதாக விளங்குகிறது பிளாட்டினம். இதனால் நகை உற்பத்தியை தாண்டி தொழிற்துறை உற்பத்தியிலும் அதிகப்படியான தேவை உள்ளது.
சீனாவில் வெள்ளிக்கு இணையாக பிளாட்டினம் தேவையும் அதிகரித்துள்ளது. தொழில்துறை, நீண்ட கால சேமிப்பு ஆகியவை முதலீட்டாளர்களின் எண்ணம் பிளாட்டினம் மீது மாறி தற்போது முக்கிய முதலீட்டு பிரிவாக பார்க்கப்படுகிறது. இதனால் ரீடைல், முதலீட்டு சந்தை ஆகிய இரண்டிலும் பிளாட்டினம் முக்கிய உலோகமாக மாறியுள்ளத.
தங்கம், வெள்ளியுடன் ஒப்பீடு
இந்த ஆண்டு தங்கம் 70 சதவீதமும், வெள்ளி 140 சதவீதமும் உயர்ந்துள்ள வேளையில் பிளாட்டினம் 170 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளி உலோகத்தின் விலை உயர்வுக்கு காரணமான பாதுகாப்பு துறை தேவை, தொழிற்துறை பயன்பாடு, டாலர் பலவீனம், வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு போன்ற அனைத்து காரணங்களும் பிளாட்டினத்தின் விலை உயர்வுக்கும் பொருந்தும். இதேபோன் நிலை தற்போது காப்பர் உலோகத்திற்கும் உருவாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications