சர்வதேச பொருளாதாரம், வர்த்தக சந்தை மோசமாக இருக்கும் காரணத்தால் மொத்த முதலீட்டாளர்கள் கூட்டமும் தற்போது உலோக சந்தை மீது கவனம் செலுத்தி வருகிறது. இதனால் எப்போதும் இல்லாத வகையில் தங்கம், வெள்ளி மட்டும் அல்லாமல் மற்ற உலோகமும் உயர்ந்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் மக்கள் டிஜிட்டல் முறையில் முதலீடு செய்வதை காட்டிலும் உலோகமாக வாங்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பிளாட்டினம் சத்தமில்லாமல் பெரும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தற்போது முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி விலை பெரிய அளவில் அதிகரித்துள்ள காரணத்தால் பிளாட்டினம், பலேடியம், நிக்கல், அலுமினியம், காப்பர், டின், ஜிங்க் போன்ற உலோகத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க துவங்கியுள்ளனர்.

சர்வதேச சந்தையில் பிளாட்டினம் விலை வெள்ளிக்கிழமை வரலாற்று உச்சத்தை பதிவு செய்ததுள்ளது. ஸ்பாட் சந்தையில் பிளாட்டினம் ஒரு ட்ராய் அவுன்ஸ் 2772 டாலரை தொட்டு வரலாற்று உச்சத்தை எட்டியது. ஒரே நாளில் 5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்த இந்த விலை, 2026 தொடக்கத்திலிருந்து 32 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. தங்கம் 15 சதவீதமும், வெள்ளி 43 சதவீதமும் உயர்ந்துள்ள நிலையில் பிளாட்டினம் மிக வேகமாக ஏறியுள்ளது.
இதுவே சர்வதேச பியூச்சர்ஸ் சந்தையில் பார்த்தால் 2026ஆம் 34 சதவீதம் உயர்ந்து பிளாட்டினம் தான் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து வெள்ளி 30 சதவீதமும், டின் 23 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
| METAL (JAN 23) | 1 WEEK | 1 MONTH | YTD | 1 YEAR | 3 YEARS |
| PLATINUM | 18.02% | 16.62% | 34.10% | 183.72% | 162.05% |
| SILVER | 14.45% | 51.47% | 30.05% | 229.95% | 323.26% |
| TIN | 7.92% | 20.90% | 23.41% | 71.58% | 67.72% |
| PALLADIUM | 11.33% | 9.01% | 22.78% | 101.71% | 20.13% |
| GOLD | 8.36% | 9.99% | 13.53% | 79.24% | 156.34% |
| NICKEL | 5.04% | 18.75% | 11.27% | 19.33% | -36.32% |
| ALUMINIUM | 1.10% | 7.39% | 5.99% | 20.42% | 19.44% |
| COPPER | 2.85% | 8.71% | 5.67% | 41.92% | 41.41% |
| ZINC | 2.19% | 6.10% | 5.05% | 15.96% | -4.95% |
| COPPER | 2% | 4.54% | 4.67% | 38.43% | 40.12% |
| LEAD | -0.29% | 1.77% | 1.45% | 4.86% | -5.84% |
அமெரிக்க டாலர் பலவீனம் முக்கிய காரணம்
பிளாட்டினம் உயர்வுக்கு மிகப்பெரிய காரணம் அமெரிக்க டாலரின் பலவீனம். அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் இந்த வாரம் 1 சதவீதம் குறைந்து இரண்டு வார குறைந்த அளவை எட்டியது. டாலர் பலவீனமடையும்போது பிற நாட்டு நாணயங்களைப் பயன்படுத்தும் வாங்குபவர்களுக்கு பிளாட்டினம் மலிவாகிறது. இதனால் உலகளாவிய தேவை அதிகரிக்கிறது.
மேலும் முதலீட்டாளர்களுக்கு அமெரிக்க பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. அமெரிக்க பங்கு, பாண்ட், டாலர் ஆகியவற்றிலிருந்து முதலீட்டை வெளியேறி தற்போது தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற சொத்துகளுக்கு செல்கிறது. அமெரிக்கா-ஐரோப்பா வர்த்தக பதற்றம், வரி அச்சுறுத்தல், ஃபெடரல் ரிசர்வ் சுதந்திரம் குறித்த விவாதங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பாதுகாப்பான சொத்துகளை நோக்கி திருப்பியுள்ளன.
விநியோக பற்றாக்குறை மற்றும் தொழில்துறை தேவை
பிளாட்டினம் விநியோகத்தில் தென்னாப்பிரிக்கா 70 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகிறது. 2025 இறுதியில் அங்கு உற்பத்தி 2.7 சதவீதம் குறைந்தது. அதிகரித்த இயக்க செலவு, மின்சார பற்றாக்குறை, போக்குவரத்து சிக்கல்கள் இதற்கு காரணமாக உள்ளது. உலோக சந்தையில் விநியோகம் குறையும் போது தேவை அதிகரித்தால் விலை உயரும்.
பிளாட்டினம் தங்கம் போல பாதுகாப்பான சொத்து மட்டுமல்ல, தொழில்துறை உலோகமாகவும் உள்ளது. ஆட்டோமொபைல், கிரீன் ஹைட்ரஜன் திட்டங்கள், ஃபைபர் ஆப்டிக்ஸ், உயர் தொழில்நுட்ப துறைகள் ஆகியவற்றில் தேவை அதிகரித்துள்ளது. இது விலை உயர்வுக்கு கூடுதல் வலிமை அளிக்கிறது.
முதலீட்டாளர்கள்ப புரிந்துக்கொள்ள வேண்டியது என்ன..?
பிளாட்டினம் தற்போது அதிகப்படியான விலையில் உள்ளது. உலகளாவிய நிச்சயமின்மை, டாலர் பலவீனம், விநியோக குறைவு, தொழில்துறை தேவை ஆகியவை நீண்ட காலத்தில் விலை உயர்வுக்கு உதவும். ஆனால் குறுகிய காலத்தில் விலை ஏற்ற இறக்கம் ஏற்படலாம். சாமானிய முதலீட்டாளர்கள் நாணய மாற்றம், வட்டி விகிதம், உலக நிகழ்வுகளை கவனித்து முடிவெடுக்க வேண்டும்.
பிளாட்டினத்தின் இந்த சாதனை உயர்வு உலக முதலீட்டாளர்கள் ஸ்திரத்தன்மையை தேடுவதை பிரதிபலிக்கிறது. தற்போது பிளாட்டினம் மற்ற உலோகங்களை விட பிரகாசமாக ஜொலிக்கிறது. ஆனால் விலை உயர்ந்துள்ளதால் ரிஸ்க் அதிகரித்துள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
More From GoodReturns

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

தங்கம், வெள்ளி விலை 3-8% சரியும் அபாயம்.. ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் திடீர் திருப்பம்..!!

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தங்கம், வெள்ளி.. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலின் எதிரொலி..!!

பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?



Click it and Unblock the Notifications