இந்தியாவில் தற்போது பங்குச்சந்தை சார்ந்த மோசடிகள் அதிகரித்து வருகின்றன. லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணத்தை இழந்ததாக நாள் தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புகார்கள் பதிவான வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அதிலிருந்து தப்பிக்க ஸெரோதா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நிதின் காமத் முக்கியமான அறிவுரையை வழங்கியிருக்கிறார்.
இந்தியாவில் அண்மைக்காலமாகவே பங்குச்சந்தை முதலீடுக்கு பயிற்சி தருவதாகவும், குறிப்பிட்ட தளத்தில் முதலீடு செய்தால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் கூறி மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். பொதுவாக வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் குழுக்கள் வாயிலாகவே இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன.

இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க ஸெரோதா தலைமை செயல் அதிகாரியான நிதின் காமத், பங்குச்சந்தை மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக உங்களின் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் செட்டிங்கை மாற்றுங்கள் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராமில் புதியவர்கள் உங்கள் எண்ணை குழுக்களில் சேர்ப்பதற்கான அணுகலை வழங்கக் கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். உடனடியாக வாட்ஸப் மற்றும் டெலிகிராம் செட்டிங்கில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால் மிகப்பெரிய மோசடிகளில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும் என கூறி அதனை எப்படி செய்வது என்பதற்கான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் ஆன்லைன் வழியாக இது போன்ற மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது என கூறி அண்மையில் இளைஞர் ஒருவர் 91 லட்சம் ரூபாயை ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் இழந்ததை குறிக்கும் செய்தியை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் 11000 கோடி ரூபாய் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடிகள் மூலம் மோசடியாளர்கள் கைகளுக்கு சென்றுள்ளது என தெரிவித்துள்ளார். இவர்கள் இன்னும் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி தொடங்கினால் என்ன ஆகும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தை முதலீடு குறித்து பயிற்சி அளிப்பதாக டெலிகிராம் குழுவில் அந்த நபர் சேர்க்கப்பட்டுள்ளார். அதில் தினமும் பங்குச்சந்தை தகவல்களை பதிவிட்டு பங்குகள் வாங்க பரிந்துரை வழங்குவார்களாம். அப்படி தினமும் பதிவுகளை இட்டு ஆசையை தூண்டியுள்ளனர். தங்கள் தளத்தில் முதலீடு செய்தால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர் பணத்தை முதலீடு செய்துள்ளார். 45 நாட்களில் 91 லட்சம் ரூபாயை அவர் முதலீடு செய்துள்ளார். பின்னர், பணத்தை எடுக்க முயன்ற போது முடியாமல் போனதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.இந்தியாவில் தற்போது பங்குச்சந்தை சார்ந்த மோசடிகள் அதிகரித்து வருகின்றன. லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணத்தை இழந்ததாக நாள் தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புகார்கள் பதிவான வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அதிலிருந்து தப்பிக்க ஸெரோதா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நிதின் காமத் முக்கியமான அறிவுரையை வழங்கியிருக்கிறார்.
இந்தியாவில் அண்மைக்காலமாகவே பங்குச்சந்தை முதலீடுக்கு பயிற்சி தருவதாகவும், குறிப்பிட்ட தளத்தில் முதலீடு செய்தால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் கூறி மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். பொதுவாக வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் குழுக்கள் வாயிலாகவே இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன.
இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க ஸெரோதா தலைமை செயல் அதிகாரியான நிதின் காமத், பங்குச்சந்தை மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக உங்களின் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் செட்டிங்கை மாற்றுங்கள் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராமில் புதியவர்கள் உங்கள் எண்ணை குழுக்களில் சேர்ப்பதற்கான அணுகலை வழங்கக் கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். உடனடியாக வாட்ஸப் மற்றும் டெலிகிராம் செட்டிங்கில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால் மிகப்பெரிய மோசடிகளில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும் என கூறி அதனை எப்படி செய்வது என்பதற்கான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் ஆன்லைன் வழியாக இது போன்ற மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது என கூறி அண்மையில் இளைஞர் ஒருவர் 91 லட்சம் ரூபாயை ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் இழந்ததை குறிக்கும் செய்தியை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் 11000 கோடி ரூபாய் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடிகள் மூலம் மோசடியாளர்கள் கைகளுக்கு சென்றுள்ளது என தெரிவித்துள்ளார். இவர்கள் இன்னும் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி தொடங்கினால் என்ன ஆகும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தை முதலீடு குறித்து பயிற்சி அளிப்பதாக டெலிகிராம் குழுவில் அந்த நபர் சேர்க்கப்பட்டுள்ளார். அதில் தினமும் பங்குச்சந்தை தகவல்களை பதிவிட்டு பங்குகள் வாங்க பரிந்துரை வழங்குவார்களாம். அப்படி தினமும் பதிவுகளை இட்டு ஆசையை தூண்டியுள்ளனர். தங்கள் தளத்தில் முதலீடு செய்தால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர் பணத்தை முதலீடு செய்துள்ளார். 45 நாட்களில் 91 லட்சம் ரூபாயை அவர் முதலீடு செய்துள்ளார். பின்னர், பணத்தை எடுக்க முயன்ற போது முடியாமல் போனதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

Click it and Unblock the Notifications