சென்னை: எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் பொருட்டு பிரதம மந்திரி காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு சம்பா பயிருக்கு காப்பீடு தொகை பெற விண்ணப்பம் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.
பருவநிலை மாற்றம் காரணமாக எப்போது மழை பெய்கிறது, எப்போது வறட்சி வருகிறது என்பதை நம்மால் கணிக்கவே முடிவதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். எனவே இது போன்ற எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும் விவசாயிகளின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில் ரபி மற்றும் ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பிரீமியம் தொகை செலுத்துவதற்கு நவம்பர் 15ஆம் தேதியான இன்றே கடைசி நாள் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 36 , 500 ரூபாய் வரை இழப்பீடாக பெறலாம்.
விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல் ,சூறாவளி ,பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு காப்பீடு வழங்குவதே பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் நோக்கம் ஆகும்.
விவசாயிகள் இதற்காக 500 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை அவர்கள் செய்திருக்கும் பயிரை பொறுத்து பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். நடப்பு பருவத்திற்கான பிரீமியம் தொகை செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.
விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் அடங்கல் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றை கொண்டு சென்று ஈ சேவை மையங்களில் காப்பீடு பெற விண்ணப்பம் செய்யலாம். நடப்பு பருவத்திற்கான பிரீமியம் செலுத்தும் கால அவகாசம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கியது, அது நவம்பர் 15ஆம் தேதியான இன்றுடன் முடிவு பெறுகிறது.
இதனிடையே தொடர்ச்சியாக தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வந்ததால் பெரும்பாலான விவசாயிகள் பிரீமியம் தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். மேலும் போதிய ஆட்கள் கிடைக்காததால் உரிய காலத்தில் பயிர் செய்ய முடியவில்லை என்ற தகவலையும் தெரிவிக்கின்றனர்.
எனவே பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக எந்த ஒரு தகவலையும் அரசு வெளியிடவில்லை.
எனவே இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ,தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது ஈ சேவை மையங்களில் நேரடியாக சென்று இந்த காப்பீடு திட்டத்திற்காக விண்ணப்பம் செய்து பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications