பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) யோஜனா 16வது தவணையை பிப்ரவரி 28, 2024 அன்று இந்திய அரசாங்கம் வெளியிடும் என்று பிரதான் மந்திரி கிசான் இணையதளம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பிப்ரவரி 28, 2024 அன்று, மகாராஷ்டிராவின் யவத்மாலில் தனது பயணத்தின் போது, 9 கோடி விவசாயிகளுக்கு 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 16வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். DBT மூலம் பயனாளியின் வங்கிக் கணக்கில் தொகை மாற்றப்படும்.

பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 15வது தவணை நவம்பர் 15, 2023 வெளியிடப்பட்டது. பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு இகேஒய்சி செயல்முறையை நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் OTP (ஒரு முறை கடவுச்சொல்) மூலம் இகேஒய்சி செயல்முறையை மேற்கொள்ளலாம். பயோமெட்ரிக் அடிப்படையிலான இகேஒய்சியை முடிக்க விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையத்துக்கு செல்லலாம்.
விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் ஹெல்ப்லைனில் இருந்து 155261 என்ற எண்ணில் உதவி பெறலாம் அல்லது 011-24300606 என்ற எண்ணிற்கு டயல் செய்யலாம் என பிரதான் மந்திரி கிசான் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 6,000 நிதிப் பலன் வழங்கப்படுகிறது, இது ரூ. 2,000 என்ற மூன்று சம தவணைகளில் செலுத்தப்படும்.
பிரதான் மந்திரி கிசான் திட்டம்: 16வது தவணைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான படிகள்
- pmkisan.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Farmer's cornerக்குச் செல்லவும்
- புதிய விவசாயி பதிவு என்பதைக் கிளிக் செய்து உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சாவை நிரப்பவும்
- இப்போது விவரங்களை உள்ளிட்டு 'ஆம்' என்பதைக் கிளிக் செய்யவும்
- பிஎம் கிசான் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட தகவலைப் பூர்த்தி செய்து, அதைச் சேமித்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
- பிஎம் கிசான் திட்ட ஸ்டேட்டஸை சரி பார்க்கவும்
- pmkisan.gov.in இணைய தளத்துக்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் 'விவசாயிகளின் மூலை' பிரிவின் கீழ் 'பயனாளி நிலை' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- பதிவு செய்யப்பட்ட ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு எண்ணை உள்ளிடவும்.
- 'தரவைப் பெறு' என்பதைக் கிளிக் செய்யவும்
- அதில் தவணையின் நிலை காட்டப்படும்.
Story Written by: I. Jayachandran


Click it and Unblock the Notifications