தீபாவளி கிஃப்டாக வரும் ரூ.2000.. அக்டோபர் 30-ஆம் தேதி விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. எனவே இந்தியக் குடும்பங்களுக்கு செலவு சற்று அதிகமாக இருக்கும். அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு போனஸ் கிடைக்கும். ஆனால் சொந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சற்று சிக்கல்தான். இருந்தாலும் தற்செயலாக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பெரும் நிவாரணமாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் 24-வது தவணை தீபாவளிக்கு முன்னரே வழங்கப்படவுள்ளது.

நியூஸ்18 செய்தி நிறுவனத்தின் தகவல்படி, 2026-ஆம் ஆண்டின் அக்டோபர் 30-ஆம் தேதி அன்று பிஎம் கிசான் திட்டத்தின் 24-வது தவணையை அரசு வழங்கவுள்ளது. இதுவரை 23 தவணைகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி கிஃப்டாக வரும் ரூ.2000.. அக்டோபர் 30-ஆம் தேதி விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM கிசான்) என்றால் என்ன?: நாட்டிலுள்ள நலிவுற்ற விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்ததுதான் இந்த PM கிசான் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.

Also Read

இந்த தொகையை அவ்வப்போது வரும் செலவுகளை மேற்கொள்ள விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். 6000 ரூபாய் ஒரே தவணையாக வழங்கப்படுவதில்லை. 3 சம தவணைகளாக அரசு பிரித்துப் பிரித்து ரூ.2000 என்ற வீதத்தில் வழங்கி வருகிறது. 23-வது தவணை 2026-ஆம் ஆண்டின் ஜூன் 20-ஆம் தேதி அன்று வழங்கப்பட்டது.

இந்நிலையில் 24-வது தவணையை அக்டோபர் 30 அன்று அரசு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் விவசாயிகள் ரூ.2,000-த்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு விவசாயிக்கும் டைரக்ட் பெனிஃபிட் ட்ரான்ஸ்பர் மூலமாக அவர்களின் அக்கவுண்டிலேயே தொகை வரவு வைக்கப்படுகிறது. ஆனால் நிதி உதவியைப் பெறுவதற்கு விவசாயிகள் ஈ-கேஒய்சி செயல்முறையை கட்டாயம் செய்திருக்க வேண்டும்.

அதோடு வங்கி கணக்குடன் ஆதார் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகள் வருகின்ற 30-ஆம் தேதிக்குள் ஈ-கேஒய்சி செயல்முறையை முடிப்பது நல்லது. தகுதியற்ற கணக்குகளை விட்டு தகுதியுள்ள விவசாயிக்கு மட்டும் பணம் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஈ-கேஒய்சி நடைமுறையை அரசு தீவிரமாக்கியுள்ளது.

உங்களுடைய பெயர் பயனாளிகளின் பட்டியலில் இருக்கிறதா? என்பதை எளிதில் சரி பார்க்கலாம்.

முதலில் pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். ஹோம் பேஜில் "Farmers Corner" என்ற பகுதி இருக்கும். அதில் "Know Your Status" என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். இப்போது உங்களுடைய பிஎம் கிசான் திட்டத்தின் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் திரையில் காண்பிக்கப்படும். கேப்ட்சா கோடை வழங்கவும்.

பின்னர் "Get Data" என்ற பட்டனை அழுத்தினால் போதும்.. உங்களுடைய ஈ-கேஒய்சி நிலை என்ன? பணம் அக்கவுண்டுக்கு வந்து விட்டதா? என்ற விபரங்களை எல்லாம் பார்க்கலாம். நிதி உதவி குறித்து ஏதேனும் சந்தேகங்கள் அல்லது இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தால் விவசாயிகள் என்ற 155261 டோல் ஃப்ரீ நம்பருக்கு அழைக்கலாம் அல்லது 011-24300606 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+