கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் தாய்மார்களுக்கு ஏற்படும் பொருளாதார சுமையைக் குறைப்பதற்காகவும், அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டம் தான் "பிரதம மந்தரி மாத்ரு வந்தனா யோஜனா" (PMMVY). முன்னதாக இத்திட்டம் "இந்திரா காந்தி மாத்ரு சாயோக் யோஜனா" (Indira Gandhi Matritva Sahyog Yojana) என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், தங்கள் முதல் குழந்தைக்கு கர்ப்பமாக இருக்கும் 19 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் நேரடி பணப் பரிமாற்ற முறை (DBT) மூலமாக ரூ.5,000/- (முன்னர் ரூ.6,000/-) மொத்தமாக மூன்று தவணைகளில் பெற தகுதி பெறுகின்றனர்.

5000 ரூபாய் நிதியுதவி: பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5000 நிதியுதவி என்பது மிகவும் முக்கியமான, அவசியான நிதியுதவியாக இருக்கிறது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி: கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் விண்ணப்பிப்பதன் மூலம் கருவுற்றது முதல் குழந்தை பிறப்பு வரை 3 தவணைகளில் நிதி வழங்கப்படும்.
பயன்கள்: கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்கு பிறகும் தாய்மார்களுக்கு ஏற்படும் பொருளாதார சுமையைக் குறைக்கிறது. தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. கர்ப்ப காலத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்த ஊக்குவிக்கிறது.
முக்கிய குறிப்பு: இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான முறை, தேவையான ஆவணங்கள் போன்ற தகவல்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் இணையதளம் (wcd.nic.in) மூலமாக பெறலாம்.
மேலும், அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் இலவச மருந்துகள் மற்றும் கர்ப காலத்திற்கு முன், பின் மேற்கொள்ளும் பரிசோதனை ஆகிய வசதிகளும் உள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தில் பயன் பெற https://pmmvy.wcd.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று குடிமகன் உள்நுழைவு விருப்பத்தை click செய்யவும். பின்னர், ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதில் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்தால் ஒரு படிவம் திறக்கப்படும்.
அவற்றில் கேட்கப்படும் தகவல்களை அளித்துவிட்டு தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். பின்னர் Submit என்ற பட்டனை அலுத்தினால் உங்களுக்கு ஒரு பதிவு எண் கிடைக்கும்.
பிறகு விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு நிதிஉதவி உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள். அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு சென்று பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா விண்ணப்ப படிவத்தை நிரப்பிவிட்டு, தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
அதன் பிறகு உங்களுக்கு ரசீது வழங்கப்படும்.அதை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். ஏனெனில், பணம் வராவிட்டால், ரசீது மூலம் விசாரிக்கலாம்.
இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்: (Required Documents)
கர்ப்பிணி பெண்ணின் ஆதார் அட்டை
குழந்தை பிறப்பு சான்றிதழ்
முகவரி சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதி சான்றிதழ்
பான் கார்டு
வாங்கி கணக்கு புத்தகம், மொபைல் எண்
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
முக்கிய தகுதி: இந்த திட்டம் வாயிலாக பலன் பெற விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண் வயது 19 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications