திருநெல்வேலி அல்வா, மும்பையின்னா வடபாவு என்பது போல் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் போஹா உணவு ரொம்ப பேமஸ். அவல், வேர்க்கடலை போன்றவற்றை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு உணவு. இந்தூர் சாலை ஒரங்களில் தள்ளுவண்டிகளில் போஹா விற்பனை செய்வார்கள்.
இந்த மாதிரி ஒரு தள்ளுவண்டியில் விற்பனை செய்பவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?. என்ன மிஞ்சி போனா ஒரு 1,000 ருபாய் சம்பாதிப்பாங்களா என்று தான் நினைப்பீங்க.

ஆனால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருக்கும் பல தனிநபர்கள் கூட, தள்ளுவண்டியில் போஹா விற்பனை செய்யும் தெருவியாபாரிகள் ஈட்டும் வருமானத்துக்கு சமமாக கூட சம்பாதிக்க முடியாது என்ற தகவல் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், வண்டியில் போஹா விற்பனை செய்பவர் நான் ஒரு வண்டியில் இருந்து தினமும் ரூ.2,500 சம்பாதிக்கிறேன்.
மொத்தம் 6 வண்டிகளில் போஹா வியாபாரம் செய்து மாதந்தோறும் ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கிறேன் என்று தெரிவித்தார். சாலையோர வியாபாரியின் கணக்குப்படி பார்த்தால், அவர் ஆண்டுக்கு சுமார் ரூ.54 லட்சம் லாபம் சம்பாதிக்கிறார். இரண்டே வருஷத்துல ரூ.1 கோடி சம்பாதிக்கிறார். இதை படிக்கும் போது பேசாமல் நாமளும் ஒரு வண்டியை போட்டு போஹா விற்பனை செய்யலாமா என்ற எண்ணம் உங்களுக்கு வருகிறதா?.

போஹா விற்பனையாளரின் வருமான தகவல் சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற அமைப்புசாரா துறையை சேர்ந்தவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆரம்பித்தால், அது தேசத்தின் வளர்ச்சிக்கான பாதையாக இருக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். அதேசமயம் சிலர் அந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications