இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை கங்கனா ரணாவத். பாஜக ஆதரவு நிலைபாடு கொண்டவர். அவ்வப்போது தன்னுடைய பேச்சுகளால் சர்ச்சையில் சிக்குவார். தற்போது இவர் எம்பியாக பதவி வகித்து வருகிறார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு மண்டி தொகுதி எம்பியாக தேர்வானார் கங்கனா. தன்னுடைய இந்த ஓராண்டு கால அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அரசியல் என்பது அதிக செலவு கொண்ட ஒரு பொழுதுபோக்கு எனக் கூறியிருக்கிறார். அரசியலை முழு நேர தொழிலாக கொள்ள முடியாது, குறிப்பாக நேர்மையான தலைவர்களால் அது நிச்சயம் முடியாது என தெரிவித்திருக்கிறார்.

எம்பி பதவி மூலம் தனக்கு வரும் சம்பளம் போதவில்லை என தெரிவித்திருக்கும் அவர் நான் என்னுடைய சொந்த தொகுதிக்கு போகிறேன் என்னுடன் சில உதவியாளர்கள் வருவார்கள், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல 300 முதல் 400 கிலொமீட்டர் வரை பயணம் செய்ய வேண்டி இருக்கிறது . இரண்டு அல்லது மூன்று கார்களில் செல்ல வேண்டியுள்ளது. இதற்காக லட்சங்களில் செலவாகிறது. எம்பியாக எனக்கு வரும் சம்பளம் இதற்கு போதவில்லை என கூறியுள்ளார்.
அரசியல் என்பது அதிக செலவு கொண்ட ஒரு வேலை அதற்கு கட்டாயம் நாம் தனிப்பட்ட முறையில் வேலை செய்தாக வேண்டி இருக்கிறது என கூறி இருக்கிறார். இந்தியாவில் தற்போது எம்பி பதவியில் இருக்கும் பலரும் பல்வேறு தொழில்களை கொண்டிருக்கின்றனர். சிலர் வழக்கறிஞர்களாக பணிபுரிகின்றனர். பலரும் எம்பி-ஆக இருந்தாலும் தங்களுடைய வேலையையும் தொடர்ந்து செய்து கொண்டு தான் வருகின்றனர், ஏனெனில் எம்பி பதவிக்கு வரக்கூடிய சம்பளம் போதாது என குறிப்பிட்டு இருக்கிறார்.
நீங்கள் ஒரு எம்பியாக இருக்கிறீர்கள் என்றால் அதை மட்டுமே ஒரு தொழிலாக கொண்டிருக்க முடியாது , உங்களுக்கென்று தனியாக ஒரு வேலை தேவை. நீங்கள் நேர்மையான ஒரு நபராக இருக்கிறீர்கள் என்றால் கட்டாயம் தனிப்பட்ட முறையில் வேலை பார்த்து நீங்கள் சம்பாதித்து தான் தொகுதிக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் .
நான் அரசியலை ரசிக்கிறேன் என என்னால் கூற முடியாது அது ஒரு சமூக சேவை, இதற்கு முன்பு நான் மக்களுக்கு சேவை செய்வேன் என நினைத்தது கிடையாது ஆனால் தற்போது செய்கிறேன் என கூறியிருக்கிறார் . நான் என்னுடைய தொகுதிக்கு செல்லும் போதெல்லாம் சாலை சேதடைந்துவிட்டது கால்வாய் உடைந்து விட்டது என மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன, இது மாநில பிரச்சினை எம்.எல்.ஏவிடம் கூறுங்கள் என்றால் உங்களிடம் தான் பணம் இருக்கிறதே நீங்கள் சரி செய்யுங்கள் என மக்கள் கூகிறார்கள் . எனவே அரசியல் வாழ்க்கை என்பது மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications