ஐடி நிறுவனங்கள் எப்படி செலவுகளை குறைக்க தனது அலுவலகத்தை மெட்ரோ நகரங்களில் இருந்து சிறிய நகரங்களுக்கு மாற்றுகிறதோ, அதேபோல் முன்னணி பிராண்டுகள் புதிய வாடிக்கையாளர்களை பெறவும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், மக்கள் மத்தியில் இருக்கும் பிராண்ட் மீதான ஈர்ப்பை பணமாக்கும் முயற்சியில் 2ஆம், 3ஆம் தர நகரங்களில் கடைகளை திறந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் தங்கத்திற்கான டிமாண்ட் இருக்கும் வேளையிலும், மத்திய அரசு தங்க நகைகளின் தரத்த பல வழிகளில் நிலைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வரும் வேளையில் பதிவு செய்யப்பட்ட, உரிய தளத்தில் மட்டுமே தங்க நகைகளை விற்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் பல சிறிய நகை கடைகள் இந்திய அளவில் மூடப்பட்டு உள்ளது மறுக்கப்படாத உண்மை.

இது பெரிய பெரிய பிராண்டு தங்க நகை கடைகளுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது, ஏற்கனவே பிரபலமான பிராண்ட் மதிப்பு, தங்கத்தின் தரத்தில் உரிய நம்பிக்கை என மக்கள் மத்தியில் தனக்கான ஒரு பிம்பத்தை காட்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் 2ஆம், 3ஆம் தர நகரங்களில் முன்னணி பிராண்டுகள் தங்களுடைய நகை கடைகளை திறந்து வருகிறது.
சமீபத்தில் பொள்ளாச்சியில் டாடா குழுமத்தின் தனிஷ்க் தனது நகை கடையை திறந்தது, இதனால் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர்-க்கு சென்று தங்க நகை வாங்கும் மக்கள் தற்போது தனிஷ்க் புதிய கடைக்கு வர துவங்கியுள்ளனர்.
தற்போது தரமான பொருட்களையும், சேவைகளையும் சற்று கூடுதல் பணத்தை கொடுத்து வாங்க மக்கள் தயாராகியுள்ளனர். இதன் வெளிப்பாடு தான் சிறிய நகரங்களில் இருக்கும் மக்கள் பிராண்டெட் நகைகளை வாங்க தூண்டுவது. டாடா குழுமத்தின் தனிஷ்க் போன்ற முன்னணி பிராண்டுகளில் லேட்டெஸ்ட் டிசைன், சரியான ஹால்மார்க் நம்பர், தங்கத்தின் தூய்மையில் உறுதியான தன்மை ஆகியவை மக்களுக்கு தற்போது முக்கியமான விஷயமாக தெரிகிறது.

இந்தியாவில் இருக்கும் முன்னணி தங்க நகை ரீடைல் செயின் நிறுவனமான
Tanishq, Malabar Gold & Diamonds, PNG Jewellers, Kalyan jewellery, Reliance jewels போன்றவை தற்போது 2ஆம், 3ஆம் தர நகரங்களில் விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு சாதகமாக சிறு நகரங்களில் ரியல் எஸ்டேட் செலவுகள் மிகவும் குறைவு.
உதாரணமாக டாடா குழுமத்தின் தனிஷ்க் பிராண்டின் 436 நகை கடைகளில் சுமார் 70 சதவீதம் சிறிய நகரங்களில் உள்ளது. இதில் 38 சதவீத நகை கடைகள் 2 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட பகுதிகளிலும், 32 சதவீத கடைகளில் சிறிய டவுன் பகுதிகளில் உள்ளத. வெறும் 30 சதவீத கடைகள் மட்டுமே மெட்ரோ மற்றும் மினி மெட்ரோ நகரங்களில் உள்ளது.
இதேபோல் கேரளா-வை தலைமையிடமாக கொண்டு வர்த்தகம் செய்து வரும் கல்யாண் ஜூவல்லர்ஸ் -ன் 172 கடைகளில் 119 மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ளது. பெரிய பிராண்டுகள் சிறிய நகரங்களுக்கு வருவதால் சிறிய நகை கடைகளுக்கு அதிகப்படியான வர்த்தக இழப்பு ஏற்படுவது முக்கிய பிரச்சனையாக உள்ளது.


Click it and Unblock the Notifications