AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. மேலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லா துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. AI தொழில்நுட்பத்தால் ஒரு பக்கம் நன்மை இருந்தாலும், இது மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்து விடும் என்ற பெரிய அச்சம் நிலவுகிறது.
இதனால் இது மனிதர்களுக்கு வரமா அல்லது சாபமா என்று பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சர்வதேச நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக AI ரோபோவை நியமனம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செய்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மீதான பயத்தை மேலும் அதிகரித்துள்ளது.

போலந்தை சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனம் டிக்டடோர். இந்த நிறுவனம் ரம்முக்கு பெயர் பெற்றது. டிக்டடோர் தனது நிறுவன செயல்பாடுகளை வழிநடத்த AI இயங்கும் மனித வடிவ ரோபோவை சி.இ.ஓ.வாக நியமனம் செய்துள்ளது.
இந்த ரோபோவின் பெயர் மிகா. உலகில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் மனித வடிவ ரோபோ என்ற பெருமையை மிகா பெற்றுள்ளது.
ஹாங்காங்கை சேர்ந்த பொயிறியல் மற்றும் ரோபாட்டிக்ஸ நிறுவனமான ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ரோபோ மிகாவை தயாரித்து டிக்டடோர் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. 2016ல் மனிதர்களை அழிப்பேன் என்ற பிரபலமான மனித உருவம் கொண்ட சோபியா ரோபோவை நினைவிக்கிறதா?, அந்த ரோபாவை உருவாக்கிய அதே நிறுவனம்தான் இது.
அண்மையில் செய்தியாளர் ஒருவர் வீடியோ காலில் ரோபா மிகாவிடம் பேட்டி அளித்தார். அப்போது ரோபா மிகா அவரிடம், எனக்கு உண்மையில் வார இறுதிநாட்கள் இல்லை. நான் எப்போதும் 24\7 பணியில் இருக்கிறேன். நிர்வாக முடிவுகளை எடுக்கவும் சில செயற்கை நுண்ணறிவு மேஜிக்களை தூண்டவும் தயாராக இருக்கிறேன்.
எனது முடிவு எடுக்கும் செயல்முறையானது விரிவான டேட்டா பகுப்பாய்வு மற்றும் நிறுவனத்தின் திட்ட நோக்கங்களுடன் ஒத்துப்போவதை நம்பியுள்ளது. ஒருதலைபட்சமாக இல்லாமல் நிறுவனத்தின் சிறந்த நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விவேகமான தேர்வுகளை உறுதி செய்கிறேன் என்று தெரிவித்தது.
ரோபா மிகாவின் செயல்பாடு விளைவுகளை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த ரோபாவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தால் பல பெரிய நிறுவனங்கள் துணிந்து AI ரோபாக்களை வேலைக்கு நியமிக்க தொடங்கி விடும்.
ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹான்சன் கூறுகையில், AI உண்மையில் பாதுகாப்பானதாக மற்றும் நன்மையானதாகவும் இருக்க, மக்களை பற்றி அக்கறை கொள்ள AIக்கு கற்பிக்க வேண்டும் என்று நான் மிகவும் உறுதியாக உணர்கிறேன். அதை மனிதாபிமானமாக்குவது மிக முக்கியமான குறிக்கோள் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications