எளிதாகவும் விரைவாகவும் பணக்காரர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறீர்களா? எனவே சீக்கிரம் உங்களுக்கு உதவி செய்து பணக்காரராக மாற்றுவதற்கான முதலீட்டு திட்டங்கள் உங்கள் பாதையில் குறுக்கிடலாம். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இவை உண்மையான முதலீட்டு திட்டங்கள் அல்ல. மாறாக பொன்சி திட்டங்கள் எனப்படும் மோசடிகள் ஆகும். இந்த கட்டுரையில் பொன்சி திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது, கண்டறிவது எப்படி மற்றும் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பொன்சி திட்டங்கள் என்றால் என்ன? மற்றும் அவை எவ்வாறு இயங்குகின்றன?: பொன்சி திட்டம் என்பது ஒரு ஏமாற்று நடவடிக்கையாகும். முதலில் ஒரு நிறுவனம் போல இயங்கி மக்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை பெறுகின்றனர். அதை முதலீடு செய்து அவற்றில் வரும் லாபத்தை திருப்பித் தருவதாகவும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இது போன்ற நிறுவனங்கள் மக்களின் பணத்தை முதலீடு செய்வதில்லை.

மாறாக புதிய முதலீட்டாளர்களை சேர்த்து அவர்களிடம் இருந்து பெறப்படும் தொகையை வைத்து பழைய முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் நடக்கிறது. அதாவது புதிய முதலீட்டாளர்கள் வந்து சேரும் வரை பழைய முதலீட்டாளர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை. அதுவே புதிய முதலீட்டாளர்கள் வராத பட்சத்தில் நிறுவனத்தை பூட்டி விட்டு மக்கள் முதலீடு செய்த தொகையோடு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக, முதலில் முதலீடு செய்தவர்களுக்கு வருமானத்தை வழங்குவது போலவும், சிலர் காண்பித்துக் கொள்கின்றனர். இதனால் பழைய முதலீட்டாளர்களுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. அது மட்டும் இன்றி புதிய முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, இது போன்ற திட்டங்களில் நம்பி பணத்தை முதலீடு செய்தால் கடுமையாக உழைத்த உங்களின் பணம் பறிபோக வாய்ப்புள்ளது.
பொன்சி திட்டங்களை எவ்வாறு கண்டறிவது?: குறைந்த அபாயம் அல்லது அபாயமே இல்லாத நிலையில் அதிக லாபம் தருவதாகக் கூறினால் சந்தேகப்படுங்கள். இவை மோசடிக்காரர்களின் யுக்தியாக இருக்கலாம்.
முதலீடு செய்வதற்கு முன்பு, நிதி நிறுவனம் பதிவு செய்யப்பட்டதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். மேலும் அந்நிறுவனத்தின் தகவல் பற்றி கூகுளில் தேடுங்கள். சில நேரம் அவற்றில் கூட போலியான இணையதளத்தின் மூலம் மக்களை கவர்வதற்கு நிறுவனங்கள் முயற்சி செய்யலாம்.
எனவே, அதில் முன்பு முதலீடு செய்த முதலீட்டாளர்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பது போல தோன்றினால் உடனே விலகி விடுங்கள். எந்த ஒரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
தற்போதெல்லாம் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை முதலில் செய்ய வேண்டும். அதன் பின் உங்களுக்கு கீழ் 2 நபர்களை முதலீடு செய்ய வைக்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதுவும் முக்கியமாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களை தான் இதற்கு தேர்வு செய்கின்றனர்.
இதில் முதலில் அந்த மாணவர்களும் சற்றும் யோசிக்காமல் அங்கும் இங்கும் கடன் வாங்கி 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை முதலீடு செய்து அந்தத் திட்டத்தில் நுழைய முயற்சி செய்கின்றனர். அதன்பின் அவர்களுக்கு கீழ் இருவரை சேர்ப்பதற்கு படாத பாடு படுகின்றனர். அருகில் இருப்பவர்கள் கூட 50 ரூபாய் தராத இந்தக் காலத்தில் உங்களை நம்பி ஒருவர் எப்படி இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வார்? என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
இதுபோன்ற திட்டங்கள் உங்களுக்கு கீழ் நபர்கள் சேரும் வரை மட்டுமே இயங்கும். அதன்பின் வரும் முதலீடுகளை எடுத்துக்கொண்டு அந்த நிறுவனம் அலேக்காக சென்று விடும். மாறாக உங்களுக்கு கீழ் முதலீடு செய்தவர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படலாம். எனவே அதிக லாபம் தருவதாக கூறும் எந்த ஒரு முதலீட்டு திட்டங்களிலும் முதலீடு செய்வதற்கு முன்பு சற்று யோசித்து செயல்படுங்கள்.
மேலும் இது போன்ற திட்டங்களில் சேரும் நபர்களை பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று புகைப்படம் எடுத்து அவர்களுடைய சோசியல் மீடியா பக்கங்களிலேயே பதிவிடுகின்றனர். இதை பார்க்கும் பிற நபர்களும் அவர்களைப் போலவே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பெரிய தொகையை கொண்டு முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இதுவும் அவர்களின் ஏமாற்றும் யுக்தியே என்பதை மறவாதீர்கள்.
இது பொன்சி திட்டத்தின் கீழ் உள்ள ஒரு வகையான முதலீட்டு திட்டம் மட்டுமே. பொன்சி திட்டத்தின் கீழ் இதே போன்ற திட்டங்கள் அதிக அளவில் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து உஷாரராக இருக்க வேண்டியது முக்கியம்.
More From GoodReturns

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications