சினிமா தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் பாப்கார்ன் எப்படி வகைபடுத்தப்படுகிறது, எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது என்பது குறித்து தெளிவான விளக்கத்தை 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, திரையரங்குகளில் டப்களில் கொடுக்கப்படும் லூஸ் முறையில் விற்பனை செய்யப்படும் பாப்கார்ன்-க்கு ரெஸ்டாரென்ட் சேவைகளுக்கு பொருந்தக்கூடிய 5% ஜிஎஸ்டி விகிதத்தில் வரி விதிக்கப்படும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது.

எனினும், பாப்கார்ன் திரைப்பட டிக்கெட்டுடன் காம்போ-வாக விற்கப்படும் போது வரிவிதிப்பு மாறுகிறது. காம்போவாக விற்கப்படும் போது இது composite supply ஆக கருதி முதன்மையான பொருட்களின் மீது விதிகப்படும் வரி விதிக்கப்படும். அப்படி இந்த காம்போ-வில் இது சினிமா டிக்கெட் மீது விதிக்கப்படும் வரி அடிப்படையில் இதற்கு வரி விதிக்கப்பட உள்ளது எனவும் தெளிப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் நடந்த 55வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பாப்கார்ன் மீதான ஜிஎஸ்டி விகிதத்தில் எந்தவிதமான உயர்வும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் பாப்கார்ன் மீது இருந்த வரி விதிப்பு குழுப்பத்தை தீர்க்கும் வகையில் விளக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் உப்பு மற்றும் மசாலா கலந்த லூஸ் முறையில் விற்கப்படும் பாப்கார்ன்-ஐ "நம்கீன்" என்று வகைப்படுத்தப்பட்டு 5% ஜிஎஸ்டி விகிதத்திற்கு உட்பட்டது என்று கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக, முன்கூட்டியே பேக் செய்யப்பட்டு லேபிள் ஒட்டப்பட்டிருந்தால், அதே பாப்கார்ன்-க்கு 12% ஜிஎஸ்டி விகிதம் பொருந்தும்.
மேலும், சர்க்கரை கலந்த பாப்கார்ன், சர்க்கரை கலந்த இனிப்புகள் வகைக்குள் வருவதால் 18% ஜிஎஸ்டி விகிதத்திற்கு உட்பட்டது என்று ஜிஎஸ்டி கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது.
இதேவேளையில் பிஜேபி தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் உறுப்பினப் அமித் மால்வியா தனது டிவிட்டரில் பாப்கார்ன் மீது புதிய வரியை விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கவில்லை. மாநில ஜிஎஸ்டி துறை அமைப்புகள் மற்றும் டிஜிஜிஐ (Directorate General of Goods and Service Tax Intelligence) -யின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு தெளிவுரை மட்டுமே வெளியிட்டது.
இந்த தெளிவுரை, தவறான வரி கோரிக்கைகளை தடுக்கவும், நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், வரி முறையில் தெளிவுத்தன்மையை உறுதிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டது. இத்தகைய தெளிவுரைகளை வெளியிடுவது வரி சர்ச்சைகளைத் தீர்க்கவும், தேவையற்ற வழக்குகளைத் தடுக்கவும் ஒரு நிலையான நடைமுறையாகும். இது வணிகம் செய்வதற்கான எளிமையை ஊக்குவிக்கிறது மற்றும் வரி செலுத்துவோருக்கு நிச்சயத்தை வழங்குகிறது என தெரிவித்தார் அமித் மால்வியா.


Click it and Unblock the Notifications