இந்தியாவின் முன்னணி சில்லறை நகை வியாபாரிகள், பட்ஜெட்டுக்குப் பிறகு தங்க நகைகளுக்கான தேவை இந்திய ரீடைல் சந்தையில் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
பட்ஜெட் அறிவிப்பில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தால் ஆன பொருட்கள், வைரம் போன்றவற்றுக்கான வரி உயர்த்தப்பட்ட நிலையில் எப்படித் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்கும். காரணம் இருக்கு வாங்க பார்ப்போம்.
ஜனவரி மாதம் 10 கிராம் தங்கம் 58,689 ரூபாய் என்ற உச்சத்தில் இருந்த விலையில் இருந்து பிப்ரவரி மாதம் 2,346 ரூபாய் குறைந்துள்ளது. இதன் வாயிலாகத் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையும், அளவும் அதிகரித்துள்ளது.
பட்ஜெட்
பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்கப்படும் என எதிர்பார்த்து வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை வாங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தியதாகவும், அது நடக்கவில்லை என்பதாலும், தங்கம் விலை குறைந்த காரணத்தாலும் பட்ஜெட்டுக்கு பின்பு தங்க நகை விற்பனை அதிகரித்துள்ளதாக ஜாய் ஆலுக்காஸ், மலபார் கோல்ட் & டயமண்ட்ஸ் மற்றும் சென்கோ கோல்டு & டயமண்ட்ஸ் ஆகியவை தெரிவித்தன.
இறக்குமதி வரி
பட்ஜெட்-க்கு பின்பு தங்கம் விலை குறைந்துள்ளதாலும், இறக்குமதி வரி குறைப்புக்கு வாய்ப்பு இல்லாததாலும், நுகர்வோர் இப்போது எங்கள் கடைகளுக்குப் படையெடுக்கின்றனர்" என்று கேரளாவைச் சேர்ந்த ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் கூறியுள்ளார்.
ரூபாய் மதிப்பு
இதேவேளையில் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வலுவடைந்து வருவதால், சர்வதேச விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாலும் இனி வரும் காலக்கட்டத்தில் தங்க நகை விற்பனை சிறப்பாக இருக்கும் எனவும் ஜாய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளார்.
தங்க நகை தேவை
நாட்டின் மொத்த நகை தேவையில் கிட்டத்தட்ட 40% தென்னிந்தியாவில் மட்டும் உள்ளது. பிப்ரவரி மாத டிமாண்ட் அளவு ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் சுமார் 15% அதிகரித்துள்ளது. சராசரியாகத் தங்க விற்பனையின் அளவு அதாவது பில் அளவு 60,000 - 70,000 ரூபாயாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மத்திய வங்கி
அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சமீபத்தில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்தது. இதன் மூலம் அமெரிக்கப் பத்திர சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்தது மட்டும் அல்லாமல் டாலர் மதிப்பும் உயர்ந்தது.
டாலர் மதிப்பு - தங்கம்
பொதுவாக அமெரிக்க டாலர் மதிப்பு அதிகமாக இருந்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்தை ஹோல்டு செய்வது அதிகரிக்கும், இதனால் தங்கம் வாங்கும் அளவு அதிகரிக்கும். இதுவே டாலர் மதிப்பு குறைந்தால் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து டிமாண்ட் அளவும் அதிகரிக்கும். தற்போது டாலர் விலை அதிகரித்துள்ளதால் தங்கம் டிமாண்ட் சர்வதேச சந்தையில் குறைந்து விலை சரிய துவங்கியுள்ளது.
ஆர்பிஐ ரெப்போ விகிதம்
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வுக்குப் போட்டியாக ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை உயர்த்தியதால், ரூபாய் மதிப்பும் உயர்ந்து இந்தியாவில் தங்கம் விலை சரிய சாதகமாக அமைந்துள்ளது. 5வது நாளாகத் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கமும் இந்தியாவும்
தங்க நகைகளுக்கு உலகிலேயே இரண்டாவது பெரிய நுகர்வோர் சந்தையைக் கொண்டு உள்ள நாடாக இந்தியா இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாகத் தங்க நகை விருப்பத்திலும் தேவையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
நடுத்தர மக்கள் மற்றும் பணக்காரர்கள்
இதன் வாயிலாக இந்தியாவில் நடுத்தர மக்கள் மற்றும் பணக்காரர்கள் எண்ணிக்கையும், சூழலும் பெரிய அளவில் மாறி இந்தியாவில் இலகுரக அதாவது லைட் வெயிட் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
தங்கம் இறக்குமதி
2021 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய மக்கள் சுமார் 611 டன் தங்க நகைகளை வாங்கி உலகின் 2வது பெரிய தங்க நுகர்வு சந்தையாக உள்ளது. இதேவேளையில் சீனா மக்கள் 673 டன் தங்க நகைகளை வாங்கி முதல் இடத்தில் உள்ளனர்.
தங்க ஏற்றுமதி சந்தை
இந்தியாவின் தங்க ஏற்றுமதி சந்தை 2015ல் 7.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2019ல் 12.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த தங்க ஏற்றுமதியில் 90 சதவீதம் ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய 5 நாடுகளுக்கு மட்டுமே சென்றுள்ளது.
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications