பொதுவாக முதலீட்டாளர்கள் ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு முன் அந்த நிறுவனம் லாபம் ஈட்டுகிறதா, வருவாய் வளர்ச்சி மற்றும் வணிக ஆர்டர்கள் வரத்து போன்றவற்றை கவனத்தில் கொள்வார்கள். இந்த 3 விஷயங்களும் சிறப்பாக உள்ள நிறுவனம்தான் பவர் மெக் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம். 1999ல் தொடங்கப்பட்ட துறையில் பவர் மெக் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மின்சார துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்நிறுவனம், பாய்லர்கள்,டர்பைன்கள் மற்றும் ஜெனரேட்டர்களை நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் பராமரித்தல் மற்றும் சிவில் பணிகள் உள்பட மின் உற்பத்தி நிலையங்களுக்கு விரிவான சேவைகளை வழங்கி வருகிறது.
பவர் மெக் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் தொடர்ச்சியாக லாபம் ஈட்டி வருகிறது, வருவாய் வளர்ச்சி சிறப்பாக உள்ளது மற்றும் வலுவான ஆர்டர் புத்தகங்களை கொண்டுள்ளது. 2024 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் ஆர்டர் மதிப்பு ரூ.57,915 கோடியாகும். மேலும், இந்நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன், ரூ.164 கோடி மதிப்பிலான இரண்டு 800 மெகாவாட் டிவிசி கோடெர்மா டிபிஎஸ் கட்டம் II இபிசி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தத்தை பிஎச்இஎல் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதாக தெரிவித்தது குறி்ப்பிடத்தக்கது.

பவர் மெக் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் நிகர வருவாயாக ரூ.1,338 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.86.15 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும். இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (2024 ஏப்ரல்-டிசம்பர்) பவர் மெக் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர வருவாய் 16 சதவீதம் உயர்ந்து ரூ.3,380 கோடியாகவும், நிகர லாபம் 34 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.219 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
இந்நிறுவனம் அண்மையில் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்தது. மேலும், 2024 அக்டோபர் 8ம் தேதியை அதற்கான பதிவு தேதியாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 350 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் இதே காலத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் இன்டெக்ஸ் 34 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் பவர் மெக் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.53 சதவீதம் குறைந்து ரூ.1,914.40ஆக இருந்தது. நல்ல ஆதாயம் தரும் இந்த பங்கின் மீது முதலீட்டாளர்கள் எப்போதும் கவனம் செலுத்துவது நல்லது.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications