அட்சய திருதியை வந்தாலே நகை விற்பனை நிறுவனங்களுக்கு கொண்டாட்டம் தான். ஆண்டில் அதிகபட்சமாக நகை விற்பனை நடைபெறக்கூடிய ஒரு காலகட்டம் தான் அட்சய திருதியை, இந்த ஆண்டு அட்சய திருதியை ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.
ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நகைக்கடைகள் எங்கும் கூட்டம் நிறைந்து காணப்படும். அட்சய திருதியை காரணமாக உள்நாட்டில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்கிறது, மற்றொரு புறம் ஈரான் போரும் அமைதியை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக தங்கத்தின் விலை படிப்படியாக உயரத் தொடங்கி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சரிவிலேயே இருந்து வந்த தங்கம் தொடர்ந்து இரண்டு நாளாக உயர்ந்து வந்திருக்கிறது.

சென்னையில் கடந்த 2 நாட்களில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 360 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2,880 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது. இந்த சூழலில் தான் தங்கத்தை ப்ரீ புக்கிங் செய்து விடலாமா என்ற எண்ணம் தோன்றுகிறது. அவ்வாறு ப்ரீ புக்கிங் செய்வது வாடிக்கையாளரான நமக்கு லாபமா, இதனால் என்ன பலன்கள் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய விலைக்கு தங்கத்தை நீங்கள் ப்ரீ புக்கிங் செய்து ஒரு அட்வான்ஸ் தொகை செலுத்தி விட்டால் நீங்கள் தங்கம் வாங்கக்கூடிய அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்திருந்தாலும் அதை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு தங்கத்தை ப்ரீ புக்கிங் செய்பவர்கள் என்னென்ன விஷயத்தை கவனிக்க வேண்டும் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

தங்கத்தை ப்ரீ புக்கிங் செய்யும்போது இன்றைய விலைக்கே பிரைஸ் லாக் செய்து விட்டால் நாளை முதல் என்ன விலை ஏறினாலும் அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். சில நிறுவனங்கள் இவ்வாறு தங்கத்தை ப்ரீ புக்கிங் செய்வதற்கு கேஷ் பேக் மற்றும் பல்வேறு பரிசுகளையும் தள்ளுபடிகளையும் கூட வழங்குகின்றன. எனவே கடைசி நேரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்துவிட்டது அன்றே பதிவு செய்திருக்கலாமோ என நாம் கவலை கொள்ள வேண்டாம்.
தங்கத்தை ப்ரீ புக்கிங் செய்யும்போது 10 - 20 சதவீத தொகை அட்வான்ஸ் தொகையாக நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். சில நிறுவனங்கள் செய்கூலியில் தள்ளுபடி ,கேஸ் பேக் என பல்வேறு தள்ளுபடிகளும் வழங்குகின்றன. எனவே அந்த பலன்கள் இருப்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சில நிறுவனங்கள் அன்றைய நாளில் தங்கம் விலை குறைந்தால் அந்த விலைக்கே கூட வாங்கிவிடலாம் என்ற சலுகையும் தருகின்றன.
முன் கூட்டியே ப்ரீ புக்கிங் செய்துவிட்டால் அட்சய திருதியை நாளில் கூட்டத்தில் சென்று மாட்டி கொள்ள வேண்டாம், அதுவும் ப்ரீ புக்கிங் செய்யும் போது நாம் சௌகரியமாக நகையை தேர்வு செய்யலாம். இல்லை என்றால் கூட்டத்தில் தான் சிக்க நேரிடும், அது தவிர்க்கப்படுகிறது. சில நிறுவனங்கள் தங்கத்தை புக்கிங் செய்பவர்களுக்கு இலவச வெள்ளி நாணயம் உள்ளிட்ட சலுகைகளையும் வழங்குகின்றன.
அடுத்த சில நாட்களில் தங்கம் விலை மூன்று சதவீதம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறும் ஆக்மன்ட் நிறுவனத்தின் ஆய்வாளர் சைனானி தங்கத்தை முன்பதிவு செய்து கொள்வது நல்லது என கூறுகிறார். ப்ரீத்தி சித்தி பில்லியன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கோத்தாரி தற்போது சூழலை கருத்தில் கொண்டு பார்த்தால் விலை உயரவே வாய்ப்பு உள்ளது என்கிறார்.
இவ்வாறு ப்ரீ புக்கிங் செய்யும் பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற நகை விற்பனை நிறுவனத்திடம் தான் நீங்கள் புக்கிங் செய்கிறீர்கள் ,ஹால்மார்க் நகையை தான் வாங்குகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதே போல ப்ரீ புக்கிங் நகைகளுக்கு என்ன சலுகை வழங்கப்படும், செய்கூலி சேதாரம், சலுகை ஆகியவை எப்படி கணக்கிடப்படும் என கவனிப்பது நல்லது. குறிப்பாக டெர்ம்ஸ் & கண்டிஷன்ஸ் என்ன என்பதை படித்து கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு வேளை புக்கிங் கேன்சல் செய்தால் என்ன நிபந்தனைகள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications