சென்னை: மக்களிடையே நுகர்வு போக்கை அதிகரிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியில் பெரிய அளவிலான சீர்திருத்தத்தை கொண்டு வர பரிந்துரை செய்திருக்கிறது மத்திய அரசு. இது தொடர்பாக அடுத்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது.
ஜிஎஸ்டி வரி: இந்தியாவில் தற்போது 5, 12, 18 , 28 என நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது . இதனை 5 மற்றும் 18 என இரண்டாக மட்டுமே குறைக்க வேண்டும் என அரசு பரிந்துரை செய்திருக்கிறது. அதே வேளையில் புகையிலை ,மதுபானம், சூதாட்டம் உள்ளிட்டவருக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்றும் அரசு தன்னுடைய பரிந்துரையில் கூறி இருக்கிறது.

விலை குறையும் பொருட்கள்: அரசின் இந்த பரிந்துரைக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் இந்தியாவில் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்களின் விலை குறையும். 12 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருக்கக்கூடிய 95 சதவீத பொருட்கள் 5 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தின் கீழ் வந்துவிடும். இதனால் பல்வேறு பொருட்களின் விலை குறையும். அதேபோல 28 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் இருக்கக்கூடிய பெரும்பாலான பொருட்கள் 18 சதவீத ஜிஎஸ்டி கீழ் வந்துவிடும். எனவே அந்த பொருட்களும் கிட்டதட்ட 10 சதவீதம் வரை நாம் விலை குறைவை எதிர்பார்க்கலாம்.
பிரீமியம் பைக்குகள்: இருசக்கர வாகனங்கள் சிறிய ரக கார்களின் விலை கூட குறைய இருக்கிறது. ஆனால் பிரீமியம் ரக இருசக்கர வாகனங்களுக்கான விலை இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்திற்கு பிறகு 45 ஆயிரம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . ஏனெனில் அரசு பிரீமியம் ரக இரு சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.
30% வரை விலை உயர்வு: தற்போது இந்தியாவில் 350 சிசிக்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 3 சதவீத செஸ் வரி என மொத்தம் 31 சதவீதம் வரி வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் அரசு இதனை 40 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. இதனை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கும் பட்சத்தில் பிரீமியம் ரக பைக்குகளின் விலை 30% வரை உயரும்.
எவ்வளவு உயரும்: அதாவது ராயல் என்பீல்டு, அப்ரிலியா, ஹார்லி டேவிட்சன் , கேடிஎம் போன்ற பைக்குகளின் விலை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை உயரும் என சொல்லப்படுகிறது. உதாரணமாக ராயல் என்ஃபீல்டின் Interceptor 650 பைக் ஆன் ரோடு விலை 3. 80 லட்சம் ரூபாயாக இருக்கிறது இது ஜிஎஸ்டி வரி உயர்விற்கு பின் 4.13 லட்சம் ரூபாய் என 34 சதவீதம் விலை உயர்வை காண இருக்கிறது. அதே போல KTM 390இன் தற்போதைய ஆன் ரோடு விலை 3.60 லட்சம் இது 3.91 லட்சம் ரூபாயாக விலை உயர வாய்ப்பு இருக்கிறது.
சிறிய ரக பைக்குகள் விலை குறையும்: சிறிய ரக ஸ்கூட்டர் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு விலை குறையும் ஆனால் பிரீமியம் ரக இருசக்கர வாகனங்களை வாங்குவோர் அதிக விலையை கொடுக்க வேண்டி இருக்கும். பிரீமியம் பைக்குகளின் ஜிஎஸ்டி 40% என உயர்த்தப்பட்டால் அதன் அடிப்படை விலை மட்டும் உயராது, ஆர்டிஓ கட்டணம், சாலை வரி, காப்பீடு கட்டணம் என அனைத்துமே உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications