ஐ.ஐ.டி. போன்ற பெரிய கல்வி நிலையங்களில் படித்தவர்கள் தான் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்குவார்கள் என்ற மாயை உடைத்தவர் பிரேர்னா ஜூன்ஜூன்வாலா. மேலும் நமக்கு எந்த துறை மீது ஆர்வம் உள்ளதோ அதை நமது தொழில் முனைவோர் உணர்வுடன் கலந்து விட்டால் தொழிலில் கொடிகட்டி பறக்கலாம் என்றும் நிரூபித்து உள்ளார்.
சிங்ப்பூரில் பிரேர்னா ஜூன்ஜூன்வாலா ஒரே துறையில் பல்வேறு வர்த்தகங்களை மேற்கொண்டு வரும் இந்திய தொழிலதிபர். இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்றவர்.

சிங்கப்பூரில் லிட்டில் பேடிங்டன் என்ற பெயரில் ஒரு வெற்றிகரமான பாலர் பள்ளியை (preschool) தொடங்கினார். பிரேர்னாவின் கடினமான உழைப்பு காரணமாக இன்று அங்கு 7 கிளைகளை கொண்ட ஒரு புகழ்பெற்ற பாலர் பள்ளி என்ற பெருமையுடன் விளங்குகிறது.
பாலர் பள்ளியை தொடர்ந்து 3 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதை நோக்கமாக கொண்ட Edutech ஸ்டார்ட்அப் நிறுவனமான கிரியேட்டிவ் கலிலியோவை தொடங்கினார். குழந்தைகளின் வாசிப்பு வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாக இந்த நிறுவனத்தை தொடங்கினார்.
பொதுவாக ஸ்டார்ட்அப் தொடங்கியவர்கள் பெரும்பாலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். அல்லது வேறு வணிக பள்ளியில் படித்தவர்களாக இருப்பார். ஆனால் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதை தவிர்த்து வேறு எந்த முறையான வணிக கல்வி படிப்புகளை பிரேர்னா படித்ததில்லை.
இவர் கற்பித்தல் மீதான தனது ஆர்வத்தை தனது தொழில்முனைவோர் உணர்வோடு தடையின்றி சேர்த்துள்ளார். இதுதான் அவரை ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்க வைத்து புதிய உயரத்தை எட்ட செய்துள்ளது. கிரியேட்டிவ் கலிலியோ நிறுவனம், லிட்டில் சிங்கம் மற்றும் டூண்டெமி என்ற இரண்டு ஆப்களை அறிமுகம் செய்தது.
இந்த இரண்டு ஆப்களும் 1 கோடிக்கும் மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தியாவின் ப்ளே ஸ்டோரில் டாப் 20 ஆப்களில் இடம் பெற்றுள்ள ஒரே குழந்தகள் கற்றல் ஆப் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பிரேர்னாவின் வர்த்தகத்துக்கு ரூ.60 கோடி முதலீடு கிடைத்தது.
2022ம் ஆண்டில் கிரியேட்டிவ் கலிலியோ நிறுவனத்தின் மதிப்பு ரூ.330 கோடியாக இருந்தது. இந்நிறுவனம் உள்ளூர் மொழிகளில் உள்ளடக்கத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. புதிய நாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரேர்னா ஜூன்ஜூன்வாலா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications