இந்தியாவில் கடந்த 22 ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி வரி திருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன் மூலம், பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. இருந்தாலும் சிலர் தொடர்ந்து பழைய விலைக்கே பொருட்களை விற்பதாக மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகள் வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி என்பது வசூல் செய்யப்படுகிறது. முதலில் 5,12,18,28 என இருந்த ஜிஎஸ்டி விகிதங்கள் தற்போது 5,18,40 என குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழிருந்த பல்வேறு பொருட்களும் 18 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டன .

அதேபோல 12 சதவீத வரி விதிப்பின் கீழ் இருந்த பெரும்பாலான பொருட்கள் 5% வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டன. மக்கள் தங்கள் வீடுகளில் அன்றாட பயன்படுத்தக்கூடிய பால் , பேஸ்ட் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள் காப்பீடு திட்டங்கள் என பலவற்றின் விலையும் இதன் காரணமாக குறைந்து இருக்கிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் அரசு வழங்கியிருக்கக்கூடிய இந்த ஜிஎஸ்டி வரி திருத்தத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை முழுவதுமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம் என அறிவித்த பல்வேறு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன. 22ஆம் தேதி முதலே இது அமலுக்கும் வந்துவிட்டது.
இந்த சூழலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் யாரேனும் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம் அல்லது ஏதேனும் ஒரு கடையில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பிறகும் பொருட்களின் விலையை குறைக்காமல் அப்படியே பழைய விலைக்கே விற்பனை செய்கிறார்கள் என்றால் மக்கள் உடனடியாக 1915 என்ற தேசிய கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 8800001915 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது . அதேபோல ஒருங்கிணைந்த புகார் தளமான INGRAM தளம் மூலம் நுகர்வோர் தங்களுடைய புகாரை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு தொடர்ச்சியாக அனைத்து பொருட்களின் விலை நிலவரங்களையும் கண்காணித்து வருவதாக தெரிவித்து இருக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் பொதுமக்கள் யாரேனும் ஏமாற்றுவதாக தெரிந்தால் உடனடியாக புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு பிறகு பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்து விட்டன. இருந்தாலும் சில விற்பனையாளர்கள் அல்லது டீலர்கள் விலை குறைப்பை நடைமுறைக்கு கொண்டு வராமல் இருக்கிறார்கள் எனும்போது இந்த எண்களை பயன்படுத்தி புகார் அளித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்திருக்கிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications