தமிழ்நாட்டின் மக்களால் மிகவும் விரும்பப்படும் உணவக பிராண்டுகளில் ஒன்றாக இருக்கும் அடையார் ஆனந்த பவன் (A2B) தனது மாபெரும் விரிவாக்கம் மற்றும் ஐபிஓ திட்டத்திற்காகத் தனியார் பங்கு முதலீட்டாளர்களுக்கு 35 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் ரூ.1000 கோடி முதல் ரூ.1200 கோடி வரை திரட்ட A2B குடும்பம் இலக்கு வைத்துள்ளதாகத் தகவல் வெளியானதில் இருந்து தமிழ்நாட்டு உணவகங்கள் பரபரப்பாக உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் A2B நிறுவனத்தின் முதன்மை போட்டியாளர் என்றால் சரவண பவன், அன்னபூரணா மற்றும் சங்கீதா போன்ற ஹோட்டல்கள் தான்.

அண்மைக்காலமாக, பல தென்னிந்திய உணவகங்கள் தங்கள் விரிவாக்கத் திட்டங்களுக்காக தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டுவது அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி: மதுரை ஸ்டைல் பிரியாணி-க்கு அடையாளமாக இருக்கும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டல்ஸ் 2019 ஆம் ஆண்டு தங்கள் பெரும்பான்மை பங்குகளை CX Partners நிறுவனத்திற்கு ரூ.260 கோடிக்கு விற்பனை செய்தது. இந்த நிதி உதவியுடன், 60 ஆண்டுகளுக்கும் மேலான இந்த பாரம்பரிய உணவகச் சங்கிலி நிறுவனம் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும், 2021 ஆம் ஆண்டில் இரண்டாவது சுற்று நிதி திரட்டலையும் வெற்றிகரமாக முடித்தனர்.
கோவை பழமுதிர் நிலையம் (KPN) Farm Fresh: கடந்த ஆண்டு, 50 ஆண்டுகளுக்கும் மேலான பழங்கள் மற்றும் காய்கறி விற்பனை சங்கிலியான கோயம்புத்தூர் அடையாளமாக இருக்கும் கோவை பழமுதிர நிலையம் (KPN) Farm Fresh நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் நிறுவனம் ரூ.800 கோடி வாங்கியது.
இதுபோன்ற பல உதாரணங்கள் இருக்கும் நிலையில், தற்போது அடையார் ஆனந்த பவனும் இந்த வழியை பின்பற்றி அடுத்த 5 வருடத்தில் இந்தியாவில் 400 முதல் 500 கடைகளைத் திறக்கவும், ஐபிஓ வெளியிடும் முக்கியமான இலக்குடன் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாகத் தனியார் ஈக்விட்டி நிறுவனங்களின் குடும்ப வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் முதலீடு செய்யத் தயங்கும். ஆனால் தற்போது இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையினரால் நடத்தப்படும் குடும்ப வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் ஆர்வமாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் 3 தலைமுறையாக ஒரு குடும்ப வர்த்தக தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்தால் அதன் அடித்தளம் மிகவும் வலிமையாக இருக்கும் என்பதைத் தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள் நம்புகிறது.
இதற்கு மற்றொரு உதாரணமாக உலகின் மிகப்பெரிய தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் பிளாக்ஸ்டோன் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய ஸ்னாஸ் நிறுவனமான ஹல்திராம்ஸ்-ல் சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்நிறுவனத்தின் அதிகப்படியான பங்குகளை வாங்குவதாக இக்குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல் படி ஹல்திராம்ஸ் 76 சதவீத பங்குகளை விற்பதாகவும், சில அகர்வால் குடும்பத்தினர் 51 சதவீத பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய விரும்புகின்றனர் என்றும், 74 சதவீத பங்குகள் வரை விற்பனை செய்யப்படலாம் என்றும் பலதரப்பட்ட தகவல் வெளியாகி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications