பொதுவாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், நிறுவனத்தை தொடங்கியவர்களின் (புரோமோட்டர்ஸ்) பங்கு மூலதனம் அதிகபட்சம் 75 சதவீதம் இருக்கலாம். சமீபகாலமாக நிப்டி 50 நிறுவனங்களின் புரோமோட்டர்ஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். 2024 டிசம்பர் காலாண்டில் நிப்டி 50 நிறுவனங்களில் புரோமோட்டர்ஸின் பங்கு மூலதனம் 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 41.1 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது புரோமோட்டர்களின் மூலதனம் 0.96 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு பங்குச் சந்தைகள் கடும் ஏற்றத்தை சந்தித்தபோது, நிப்டி 50 பங்குகளின் விலை புதிய உச்சத்தை எட்டியதால் புரோமோட்டர்ஸ் பங்குகளை விற்பனை செய்தனர். குறிப்பாக பங்குச் சந்தை சரிவு காண தொடங்குவதற்கு முன்பே பங்குகளை விற்பனை செய்து பணமாக்கி விட்டனர். நிப்டி 50 நிறுவனங்களில் புரோமோட்டர்ஸ் பங்கு மூலதனம் குறைவது இது முதல் நிகழ்வல்ல. கடந்த 2009ம் ஆண்டு முதல் புரோமோட்டர்ஸ் தங்களது பங்கு மூலதனத்தை குறைத்து வருகின்றனர். இருப்பினும் 2019 முதல் 2021 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் புரோமோட்டர்ஸின் பங்கு மூலதனம் உயர்ந்தது.

ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் டாக்டர் விகே விஜயகுமார் கூறுகையில், புரோமோட்டர்ஸ் பங்குகள் குறைந்து வருவது நிச்சயமாக ஒரு மோசமான விஷயம். நடப்பு நிதியாண்டில் நிப்டி 50 நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி 7 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது. குறைந்து வரும் லாப போக்குகளை அறிந்த புரோமோட்டர்ஸ் அதிக விலையில் பங்குகளை பணமாக்கினர். பின்னோக்கிப் பார்க்கும் போது இது சரியான முடிவுதான் என்று தெரிவித்தார்.
எப்போதும் புரோமோட்டர்ஸ் லாப நோக்கில்தான் பங்குகளை விற்பனை செய்வார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. சில சந்தர்ப்பங்களில் ஒழுங்கு முறை தேவைகளை நிறைவு செய்வது மற்றும் கடனை குறைக்க போன்ற காரணங்களால் புரோமோட்டர்ஸ் பங்குகளை விற்பனை செய்யலாம். எனவே புரோமோட்டர் பங்குகளை விற்பனை செய்கிறார் என்றால் அதற்கான காரணங்களை தெரிந்து கொள்வது நல்லது. அதேசமயம், பங்கின் விலை அதிகமாக உள்ளது மற்றும் நிறுவனம் தொடர்பான எதிர்மறையான கண்ணோட்டம் காரணமாக புரோமோட்டர்ஸ் பங்குகளை விற்பனை செய்கின்றனர் என்றால், அந்த பங்கு கடுமையான சரிவுக்கு வழிவகுக்கும். குறைந்து வரும் புரோமோட்டர்ஸ் பங்கு மற்றும் பங்கின் விலை அதிக மதிப்பீடுகளின் கலவை முதலீட்டாளர்களுக்கு சாத்தியமான அபாயங்களை குறிக்கலாம்.
பங்கின் விலை உச்சத்தில் இருக்கும்போது புரோமோட்டர்ஸ் பங்குகளை விற்பனை செய்வது ஒரு எச்சரிக்கையை குறிக்கிறது. அப்போது முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். புரோமோட்டர்ஸ் தங்கள் பங்குகளை குறைத்து கொள்வதால், நிறுவன முதலீட்டாளர்கள் நிறுவனத்துக்குள் வந்து விடுகிறார்கள். கடந்த டிசம்பர் காலாண்டில் நிறுவனங்களில் நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 47.5 சதவீதம் என்ற உச்சத்தை எட்டியது. இதற்கு பெரும்பாலும் உள்நாட்டு மியூச்சுவல் பண்டுகள் காரணமாக இருந்தன. அதேசமயம் தனிப்பட்ட முதலீட்டாளர்களின் பஙகு மூலதனம் 6 ஆண்டுகளுக்கும் மேலாக 8 முதல் 8.5 சதவீதம் என்ற அளவில் நிலையாக உள்ளது.
Story written by: Subramanian
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications